Art Making Business - நன்கு படம் வரைய தெரிந்தவர்கள் வீட்டில் இருந்தே படம் வரைந்து டெலிவரி செய்தால் மாதம் ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம், எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நீங்கள் படம் வரைவதில் கில்லாடி என்றால் அந்த திறமையை வைத்து வீட்டில் இருந்தே எப்படி வருமானம் பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக படம் வரைவது என்பது ஒரு ஆகச்சிறந்த திறமை, அது ஒரு ஆகச்சிறந்த தொழில் ஆகவும் மாறி இருக்கிறது, தற்போது ஒருவருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு பலரும் மெனக்கெடுகிறார்கள்.
அந்த வகையில் ஆர்ட் எனபது பெரும்பாலும் அனைவரும் விரும்பும் ஆகச்சிறந்த பரிசாக இருக்கிறது, கொடுக்க நினைப்பவர்களும் சரி, வாங்குபவர்களும் சரி ஒரு ஆர்ட்டை அதிகம் விரும்புகிறார்கள், அந்த வகையில் அந்த ஆர்ட்டை தொழிலாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம், முதலில் உங்களுக்கு என்று ஒரு சமூக வலைதள அக்கவுண்ட் இருக்க வேண்டும்.
அது இன்ஸ்டாகிராமாக இருந்தால் இன்னும் பெட்டர், பொதுவாக ஆர்ட்டிஸ்ட்கள் போடும் ஹேஸ்டாக்குகளை காபி செய்து அதை நோட்பேடில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள், உங்களது பெஸ்ட் ஆர்ட்கள் எது என்று நினைக்கிறீர்களோ அதை அந்த ஹேஸ்டாக்குடன் பதிவிடுங்கள், நல்ல ரீச் இருக்கும், ரீச் இருந்தாலே ஆட்டோமேட்டிக்காக ஆர்டர்களும் வர ஆரம்பிக்கும்.
பொதுவாக ஒரு பெயிண்டிங்கிற்கு ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள், அளவை பொறுத்து சார்ஜ் செய்கிறார்கள், ப்ரேமிற்கு தனியாக பணம், அந்த வகையில் மாதத்திற்கு ஒரு 10 ஆர்டர்கள் வந்தால் கூட சராசரியாக ரூ 10,000 வரை மாத வருமானம் பார்க்கலாம், ரீச் அதிகம் ஆக அதிகம் ஆக ஆர்டரும் அதிகமாகும், வருமானமும் அப்படியே அதிகரிக்கும்.