Ajwain Powder Making Business Ideas - ஓம இலை பொடி தயாரிப்பில் ஈடுபட்டு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
ஓம இலை பொடி தயாரிப்பதற்கு முன் அதற்கான தேவை என்ன இருக்கிறது என்பது குறித்து முதலில் பார்க்கலாம், ஓம இலை என்பது ஒரு காலத்தில் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகித்தது, செரிமான கோளாறுகள், சளி, இருமல், பல்வலி, சரும பாதுகாப்பு, முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஓம இலை பொடி என்பது சிறந்த தீர்வாக அமையும்.
அந்த வகையில் ஓம இலை பொடிக்கான மவுசு என்பது மருத்துவ சந்தையில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது, சரி இந்த ஓம இலை பொடி எப்படி தயார் செய்வது என கேட்டால், ஓமம் என்பது எளிதாக வீட்டிலேயே வளரக்கூடியது தான் உங்கள் வீட்டில் மாடி இருந்தால் அதில் வரிசையாக ரேக்குகள் அமைத்து தொட்டிகள் வைத்து ஓம செடியை வளர்க்கலாம்.
செடியில் ஓம இலை ஒரு 45 நாட்களிலேயே அதிகமாக தளிர் விட ஆரம்பிக்கும், இலைகளை பறித்து நன்கு நிழலில் 5 நாட்களுக்கு காய வைக்க வேண்டும், பின்னர் அரைத்து நன்கு பொடியாக்கி கொள்ள வேண்டும், பின்னர் பேக்கிங் கவர்களில் பேக் செய்து சந்தைப்படுத்தலாம், பொதுவாக 100 கிராம் ஓம இலை பொடி என்பது சந்தைகளில் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
நீங்கள் முறையாக உங்கள் தயாரிப்பை ஆவணப்படுத்தி லைசென்ஸ் எல்லாம் வாங்கி செய்தால் ஈகாமர்ஸ் தளங்களிலும் இப்பொடியை விற்கலாம், உங்கள் ஊரில் மட்டும் சந்தைப்படுத்தினால் போதும் என்றால் மாதம் ரூ 15000 க்கு குறையாமல் வருமானம் பார்க்கலாம், ஈ காமர்ஸ் தளங்களிலும் சந்தைப்படுத்தினால் இன்னும் வருமானத்தை அதிகப்படுத்த முடியும்.