• India
```

அகத்திக்கீரை வளர்ப்பு...சிறிய முதலீடு செய்தால் போது...மாதம் ரூ 15,000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Agathi Keerai Planting Business

By Ramesh

Published on:  2025-02-27 11:59:06  |    342

Agathi Keerai Planting Business Ideas - அகத்திக்கீரை வளர்ப்பில் ஈடுபட்டு எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அகத்திக்கீரை வளர்ப்பில் ஈடுபடுவதற்கு முன் முதலில் அகத்திக்கீரைக்கான தேவை மற்றும் சந்தை மதிப்பு என்ன என்பதை குறித்து தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது, அகத்திக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குவதால் மக்கள் இக்கீரையை விரும்பி வாங்குவார்கள்.

அந்த வகையில் அகத்திக்கீரைக்கான தேவை என்பதும், மார்க்கெட் என்பதும் மக்களிடையே நன்கு இருப்பதை உணர முடியும், சரி இந்த அகத்திக்கீரையை எப்படி வளர்ப்பது, விதைகளை எங்கு கொள்முதல் செய்வது, எப்படி விற்பனை களத்தில் இறங்குவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். முதலில் உங்களிடம் தோட்டம் இருந்தால் மண்களை கிளறி நீர் தெளித்து இரண்டு நாள் உலர வைக்க வேண்டும்.



அகத்தி விதைகளை வேளாண் சந்தைகள் அல்லது வேளாண் கல்லூரிகளில் வாங்கி கொள்ளலாம், தற்போது நல்ல தரமான விதைகள் ஆன்லைனிலும் கிடைக்கின்றன, முதலில் விதைகளை விதைத்து, விதை வளரும் சமயத்தில் நவபாசன உரம் நீரில் கலந்து செடியில் தெளிக்காமல் செடியை சுற்றி தெளிக்க வேண்டும், தேங்காய் நார்களை நன்கு உரித்து செடிப்பரப்பு முழுக்க பரப்பி தூவ வேண்டும்.

இது நீரோட்டத்தை செடிகளை சுற்றி நிலை நிறுத்தும், பொதுவாக அகத்திக்கீரை 60 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், அறுவடை செய்து ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்கலாம், சந்தைகள், சூப்பர் மார்க்கெட்கள், காய்கறி கடைகள் என பல இடங்களில் சந்தைப்படுத்தலாம், அறுவடை நீங்கள் சந்தைப்படுத்தும் அளவை பொறுத்து சராசரியாக மாதம் ரூ 15,000 வரை வருமானம் பார்க்கலாம்.

" தோட்டத்தில் விதைக்கும் அளவையும், சந்தைப்படுத்தும் மார்க்கெட் அளவையும் பொறுத்து இன்னும் வருமானத்தை அதிகப்படுத்த முடியும் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas