Aavaram Poo Powder Selling Business - ஆவாரம் பூ பொடி தயாரிப்பில் ஈடுபடும் முன் எதற்காக எல்லாம் இந்த ஆவாரம் பூ பொடி பயன்படுகிறது என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது, இந்த ஆவாரம் பூவில் பல வித மருத்துவ பயன்கள் இருக்கின்றன, முக்கியமாக சொல்ல வேண்டுமானால் நீரிழிவு நோய்க்கு ஆவாரம் பூ என்பது சிறந்த இயற்கை மருந்தாக பார்க்கப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் சிறுநீரக பாதுகாப்பு, இரத்தநாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்தல் போன்ற இன்னும் சில மருத்துவ பயன்களும் ஆவாரம் பூவால் கிடைக்கிறது, பொதுவாக இந்த ஆவாரம் பூ ஆனது வெட்ட வெளிகளில் காடுகள் போல இருக்கும் இடங்களில் அதிகமாக தென்படும், வீட்டிலும் ஆவாரம் கன்றை வளர்க்கலாம், வீட்டில் வளர்த்தால் வெளியில் சென்று பறிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
சரி ஆவாரம் பூ பொடி தயாரிப்பில் ஈடுபடுவது எப்படி என கேட்டால், முதலில் ஆவாரம் பூக்களை பறித்து நிழலில் நன்கு உலரும் படி காய வைக்க வேண்டும், கொஞ்சம் ஆவாரம் இலையையும் பறித்து அதோடு காய வைக்கலாம், பின்னர் ஆவாரம் பூ, கொஞ்சம் ஆவாரம் செடியின் இலை என இரண்டையும் போட்டு நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக இந்த ஆவாரம் பூ பொடி 100 கிராம் 100 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, அரைத்து ஆயுர்வேத கடைகளில் கொடுக்கலாம், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சந்தைப்படுத்தலாம், இதையில் வெந்நீரில் போட்டும் பருகலாம் அல்லது டீ போல போட்டு நாட்டுச்சர்க்கரை கலந்தோ, கருப்பட்டி கலந்தோ குடிக்கலாம், ஒரு குறிப்பிட்ட ஏரியாக்குள் சந்தைப்படுத்தினால் மாதம் ரூ 15,000 வரை வருமானம் பார்க்கலாம்.
" முறையாக லைசென்ஸ் எடுத்து லேபல்கள் எல்லாம் கொடுத்து, ஈ காமர்ஸ் மூலமும் விநியோகம் செய்தால் இன்னும் வருமானத்தை அதிகப்படுத்தலாம் "