5 RS Essentials Packing - பொதுவாக வீட்டிற்கு தேவைப்படும் அத்தியாவசிய சிறிய சிறிய மூலப்பொருட்களை யாரும் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வதில்லை, உதாரணமாக சுக்கு, மிளகு, முந்திரி, ஏலம் எல்லாம் கிலோ ரூ 500 முதல் 2000 வரை விலை இருக்கும், இதை யாரும் கிலோ கணக்கில் வாங்குவதில்லை, 5 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் தான் கடைகளில் வாங்குவார்கள்.
கடைகளிலேயே 5 ரூபாய் பாக்கெட்டுகளாக இருந்தால் அது வாங்குபவர்களுக்கும் எளிதில், விற்பவர்களுக்கு அப்படியே ஒரு பாக்கெட்டை பிய்த்து கொடுப்பது என்பது எளிது, அந்த வகையில் மூலப்பொருள்களை சிறிய சிறிய பேக்கிங்கள் செய்து அட்டை போட்டு கடைகளுக்கு போடுவது குறித்த தொழில் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
முதலில் இந்த மூலப்பொருள்கள் அனைத்தும் எங்கு வாங்கினால், மொத்த விலைக்கு கிடைக்கும் என்பதை அறிந்து வைத்து இருப்பது அவசியம், 5 ரூபாய்க்கு எவ்வளவு போடுவது என தெரியாது என்றால் கடைகளில் சுக்கு, மிளகு, முந்திரி, ஏலம் உள்ளிட்ட 5 ரூபாய் பாக்கெட்டுகளை வாங்கி தராசில் எடை போட்டு அளந்து கொள்ளவும், அதற்கேற்ப அந்த எடைக்கேற்ப பேக்கிங் செய்தால் போதும்.
அட்டை, கவர் எல்லாம் மொத்த விலை கடைகளில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், பேக்கிங் மெசின்கள் வாங்க முதலீடு இருந்தால் மெசின்கள் வாங்கி பேக்கிங் செய்தால் அதிக அளவில் மூலப்பொருள்கள் அட்டையை சந்தைப்படுத்த முடியும், மொத்தவிலை கடைகள், பல சரக்கு கடைகள், பெட்டி கடைகள் என எல்லா இடத்திற்கும் உங்களது அட்டையை கொண்டு செல்ல முடியும்.
" குறைந்தபட்சம் ஒரு கிலோ நீங்கள் அட்டையாக பேக்கிங் செய்யும் போது, 50% வரை இலாபம் இருக்கும், சிறிய அளவில் கைகளால் பேக்கிங் செய்தால் மாதம் ரூ 20000 வரை வருமானம் கண்டிப்பாக பார்க்கலாம், மெசின்கள் வைத்து பேக்கிங் செய்தால் இலட்சங்களில் கூட வருமானம் பார்க்க முடியும் "