இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. தற்போது நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் நிதியியல் முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது. ஜியோ நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு... எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரை, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,861 கோடியாக பதிவாகியுள்ளது. இது 2023-24 நிதியாண்டின் இதே காலாண்டை விட 25.95% அதிகரிப்பைக் காட்டுகிறது. மேலும், மதிப்பீட்டு காலக்கட்டத்தில், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் ஈட்டிய சராசரி வருவாய் (ARPU) 11.8% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிட்டெட், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தனது செயல்பாட்டு வருவாயை ரூ.38,750 கோடியாக உயர்த்தியுள்ளது.
ஜியோ தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 482 மில்லியன் பேர் வரை விரிவாக்கி, தனது வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. மேலும், இக்காலாண்டில், ஜியோவின் மொத்த டேட்டா பயன்பாடு 22% அதிகரித்துள்ளது, இதில் ஒவ்வொரு பயனரும் மாதத்துக்கு சராசரியாக 32.3 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகின்றனர்.
சமீபத்திய கட்டண உயர்வு மற்றும் அதிக வருவாய் தரும் வாடிக்கையாளர்கள் அதிகரித்ததே வருவாய் உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கட்டண உயர்வின் முழு தாக்கம் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது