Sembaruthi Powder Making - செம்பருத்தி பவுடர் தயாரிப்பில் ஈடுபட்டு எவ்வாறு ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செம்பருத்தி பவுடர் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன் அதற்கான தேவைகள் என்ன என்ன இங்கு இருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், செம்பருத்தி பொடியில் பல நன்மைகள் இருக்கின்றன, தலையில் தேய்த்தால் முடியை பலப்படுத்தும், டீயோடு பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், முகத்தில் தேய்த்து குளித்தால் முகம் பொலிவு ஆகும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், பொடடியை வெந்நீரிலோ, டீயிலோ கலந்து குடித்து வந்தால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை குறைக்கலாம், அந்த வகையில் செம்பருத்தி பவுடருக்கு ஹெல்த் மார்க்கெட்டில் நல்லதொரு மார்க்கெட் இருப்பதை உணர முடிகிறது, சரி இந்த செம்பருத்தியை வீட்டில் எப்படி வளர்ப்பது, எப்படி சந்தைப்படுத்தலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்.
வேளாண் சந்தைகள் அல்லது வேளாண் கல்லூரிகளில் நல்ல தரமான செம்பருத்தி விதைகளை முதலில் வாங்கிக் கொள்ள வேண்டும், வீட்டில் தோட்டம் இருந்தால் மண்களை நன்கு கிளறி, தேங்காய் நார், காய்ந்த சாணம் உள்ளிட்டவைகளை பரப்பி விதைகளை தூவலாம், 20 நாட்களில் விதை வளர ஆரம்பித்திடும், 6 மாதங்கள் முதல் 24 மாதங்களில் பூ பூக்க ஆரம்பித்து விடும்.
பூக்களையும் இலைகளையும் பறித்து நன்கு நிழலில் 3 நாட்கள் வரை காய வைத்து மில்லில் அரைத்து விட வேண்டியதான், வெறும் பூக்களை மட்டும் போட கூடாது, இலைகளையும் சேர்த்து தான் போட வேண்டும், 100 கிராம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது, மாதத்திற்கு ஒரு 3 கிலோ வரை சந்தைப்படுத்த முடிந்தால் கூட குறைந்த பட்சம் மாதம் ரூ 20,000 வரை வருமானம் பார்க்க முடியும்.
" முறையாக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பில் ரிஜிஸ்டர் செய்து ஈ காமர்ஸ்சிலும் சந்தைப்படுத்தினால் இன்னும் அதிகம் வருமானம் பார்க்க முடியும் "