• India
```

Top Up Loan னா என்ன...அதை எப்படி பெறுவது...யாரெல்லாம் பெற முடியும்...?

Top Up Loan Details In Tamil

By Ramesh

Published on:  2025-01-17 13:29:12  |    158

Top Up Loan Details In Tamil - பொதுவாக டாப் அப் லோன் என்பது ஒரு Additional லோன், அதாவது ஏற்கனவே ஒருவர் தனிநபர் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் அந்த கடனில் இருந்து கொஞ்சம் அதிமாக தேவைக்கு ஏற்ப கூடுதலாக கடன் எடுத்துக் கொள்ளும் ஒரு வசதி ஆகும், இது பல வங்கிகளில் தற்போது நடைமுறைகளில் இருக்கிறது, தனி நபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் ஆகியவைகளில் மட்டும் இந்த Top Up Loan செயல்பாட்டில் இருப்பதாக தகவல்,

உதாரணத்திற்கு நீங்கள் எடுத்து இருக்கும் தனிநபர் கடன் 2 இலட்சம் என வைத்துக் கொள்வோம், ஆனால் நீங்கள் சமர்ப்பித்து இருக்கும் ஆவணங்கள், சம்பள விகிதம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது நீங்கள் 7 இலட்சம் வரை கடன் பெற தகுதியானவராக இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், தற்போது உங்களுக்கு ஒரு 3 இலட்சம் ஏதோ ஒரு தேவைக்காக தேவைப்படுகிறது,



நீங்கள் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து இன்னொரு லோன் தான் எடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஏற்கனவே எடுத்த அந்த 2 இலட்சம் லோனை, இன்னும் 3 இலட்சம் எடுத்து 5 இலட்ச ரூபாய் லோனாக மாற்றிக் கொள்ளலாம், இது தான் டாப் அப் லோன் எனப்படுகிறது, பல பொதுத்துறை வங்கிகளிலும் இந்த டாப் அப் லோன் வசதி இருக்கிறது.

ஏற்கனவே லோன் தொகைக்காக ஆவணங்களை சமர்ப்பித்து இருப்பதால், பெரிதாக இந்த டாப் அப் லோனுக்கு ஆவணங்கள் தேவைப்படாது, ஆதார், பான் கார்டு, சம்பள விகிதம் கொண்ட சான்று இவ்வளவு இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே Active ஆக இருக்கும் கடனை நீங்கள் சரியாக கட்டிக் கொண்டு வரும் பட்சத்தில், உங்களுக்கு டாப் அப் லோன் என்பது எளிதாக, சீக்கிரமாக வழங்கப்படும்.