Jasmine Price Surges - பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி மார்க்கெட்டுகளில் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை ஆனது சரமாரியாக உயர்ந்து வருகிறது, இதனால் பொது மக்கள் தங்களது பெரும்பாலான பண்டிகை செலவுகளை பூக்கள் மற்றும் பூஜை பொருட்களிலேயே செலவு வேண்டிய நிலை இருப்பதாக தகவல்,சில தினங்களுக்கு முன்பு வரை, மல்லி மார்க்கெட்டுகளில் கிலோ 700 முதல் 800 ரூ வரை விற்றது.
ஆனால் தற்போது மல்லியின் விலை, பூ மார்க்கெட்டுகளில் மட மடவென உயர்ந்து கிலோ 2000 முதல் 3500 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. பிச்சி பூவின் விலை இரண்டு தினங்களுக்கு முன்பு கிலோ 350 முதல் 450 ரூபாய் வரை விற்றுக் கொண்டு இருந்த நிலையில், மட மடவென உயர்ந்து தற்போது கிலோ ஆயிரம் ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது.
இது போக பூஜைக்கு பயன்படுத்தப்படும் துளசி, ரோஜாக்கள், பன்னீர் பூ சரங்கள், மரிக்கொழுந்து, செண்டு பூ சரங்கள், வாழைப் பழங்கள் உள்ளிட்டவைகளும் மார்க்கெட்டுகளில் வெகுவாக விலை உயர்ந்து இருக்கிறது, பண்டிகையை ஒட்டி பூஜை பொருட்கள் எல்லாம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால், நுகர்வோர்களும், விற்பனையாளர்களும் பொருள்களை வாங்கி பயன்படுத்துவதில் சிரமத்தை உணர்ந்து இருக்கின்றனர்.
” தேங்காய், பூக்கள் மட்டும் அல்லாது திருநீர், குங்குமம், சந்தனம்,மாலைகள் உள்ளிட்ட பொருள்களும் சந்தைகளில் விலை உயர்வை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது “