• India
```

மார்க்கெட் களத்தில்...சதத்தை தொட்டது வெங்காயத்தின் விலை...!

Onion Rate Hits 100 RS In Market

By Ramesh

Published on:  2024-11-12 04:44:59  |    972

Onion Rate Hits 100 RS In Market - சந்தைகளில் வரத்து குறைவால் 45 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது சதம் அடித்து இருக்கிறது.

Onion Rate Hits 100 RS In Market - தமிழ்நாடு வெங்காய உற்பத்தியில் இந்தியாவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது, வெங்காயம் குறைந்த கால சாகுபடியில் நிறைய இலாபம் தரவல்லதாக இருக்கிறது, பொதுவாக பல்லாரி, சின்ன வெங்காயம் இரண்டும் தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிகமாக விளைகிறது. இங்கிருந்து தான் பிற மாவட்டங்களுக்கும் சப்ளை ஆகிறது.

ஆனால் தற்போது பெரும்பாலான வெங்காயம் விளையும் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் வெங்காய விளைச்சல் வெகுவாக பாதித்து இருக்கிறது, இதனால் பல மாவட்ட சந்தைகளிலும் வெங்காய வரத்து என்பது வெகுவாக குறைந்து இருக்கிறது, நாள் ஒன்றுக்கு 30 டன் முதல் 45 டன் வரை வரும் சந்தைகளில் தற்போது 10 டன் வருவதே சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது.



சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து இருப்பதால் ரூ 45 முதல் 60 வரை விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை ஒரு வாரத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தற்போது ரூ 95 முதல் 100 வரை விற்கப்படுகிறது, வெங்காயத்தின் விலை எகிறி இருப்பதால் ஹோட்டல்களில் அது சார்ந்து விற்கப்படும் உணவுகளின் விலையும் உயரும் அபாயம் இருக்கிறது.

கடந்த முறை வெங்காயத்தின் விலை ரூ 100 யை தொட்ட போது ஒன்றிய அரசு முன் வந்து எகிப்து, ஸ்விட்சர்லாந்து, துருக்கி, சீனா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வெங்காயத்தின் விலையை சமநிலைப்படுத்தியது, இந்த முறை அவ்வாறு நிகழுமா என்பதை பெய்யும் மழையை பொறுத்து தான் முடிவு செய்ய வேண்டும்.