• India
```

HMPV வைரஸ் எதிரொலி...பங்குச்சந்தையில் பத்து இலட்சம் கோடி வரை இழப்பு...!

HMPV Effect Share Market Crashed

By Ramesh

Published on:  2025-01-07 03:09:29  |    151

HMPV Effect: Share Market Crashed - HMPV வைரஸ் எதிரொலியால் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பத்து இலட்சம் கோடி வரை இழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

HMPV Effect: Share Market Crashed - இன்றைய தினம் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் என இரண்டும் ஏற்றத்தில் ஆரம்பித்து, பெரும் சரிவில் முடிந்து இருக்கின்றன,  HMPV வைரஸ் தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில் அதன் தாக்கம் பங்குச்சந்தை வரை சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து HMPV யின் அதிர்வலைகள் இருக்கும் பட்சத்தில் பங்குச்சந்தை தொடர் சரிவை நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கிறது.

மும்பை பங்கு சந்தையின் குறியீடான சென்செக்ஸ், இன்று காலை 79,281.65 புள்ளிகளில் துவங்கி மாலையில் 77,964.9 புள்ளிகளில் முடிவடைந்து இருக்கிறது, நேற்றைய தினத்தின் முடிவை (79,223.11) காட்டிலும் இன்று 1258.12 புள்ளிகள் சரிந்து இருக்கிறது, இன்றைய சென்செக்ஸ் அதிகபட்சமாக 79,532.67 புள்ளிகள் வரை சென்றது, குறைந்தபட்சமாக 77,781.62 புள்ளிகள் வரை சென்றது.



தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி இன்று காலையில் 24,045.80 புள்ளிகளில் ஆரம்பித்து மாலையில் 23,616.05 புள்ளிகளில் முடிவடைந்து இருக்கிறது. நேற்றைய தினத்தின் முடிவை (24,004.75) காட்டிலும் இன்று 388.70 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இன்றைய நிஃப்டி அதிகபட்சமாக 24,089.95 புள்ளியைத் தொட்டது, குறைந்தபட்சமாக 23,551.90 என்ற புள்ளி வரை சென்றது.

HMPV வைரஸ் தொற்று சீனாவை அடுத்து இந்தியாவிலும் 3 தொற்றுகள் பதிவாகி இருக்கிறது, இரண்டு தொற்றுகள் பெங்களுருவிலும், ஒரு தொற்று குஜராத்திலும் பதிவாகி இருக்கிறது, இந்த தாக்கம் தான் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து முதலீட்டாளர்களின் பத்து இலட்சம் கோடி இழப்பிற்கும் காரணம் ஆகி இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி இருக்கின்றனர்.