• India
```

சரிந்தது தக்காளியின் விலை...கிலோ ரூ 15 என சந்தைகளில் விற்பனை...!

Tomato Prices Dropped

By Ramesh

Published on:  2024-12-17 18:03:09  |    127

Tomato Prices Dropped - கோயம்பேடு மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ 15 ஆக சரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tomato Prices Dropped - உலகளாவிய அளவில் இந்தியா, சீனாவிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தக்காளி உற்பத்தியாளராக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நாட்டின் 90 சதவிகித தக்காளிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அந்த வகையில் தமிழ்நாடு ஆனது ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்கின்றன.

கடந்த வாரம் முழுக்க மழையால் தமிழக தள்ளாடியதால் வழக்கத்தை விட கிட்டத்தட்ட 60% குறைவாகவே தக்காளி என்பது தமிழக மார்க்கெட்டிற்கு வந்தது, இதனால் தக்காளியின் விலை என்பது கோயம்பேடு சந்தைகளில் தாறுமாறாக உயர்ந்து கிலோ ரூ 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்டது, மழை தொடர்ந்து நீடித்ததால் கடந்த வாரம் முழுக்க அதே விலை தான் நீடித்தது.



தற்போது மழை குறைந்து தக்காளியின் வரத்து எல்லா பகுதிகளில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளில் குவிந்து வருவதால், தேவைக்கு அதிகமான விற்பனைக்கு அதிகமான தக்காளி குவிந்து விட்டது, இதனால் வியாபாரிகள் தக்காளியை கிலோ ரூ 15 முதல் ரூ 20 வரை போட்டி போட்டு விற்கிறார்கள், தொடர்ந்து வரத்து அதிகரித்து வந்தால் இன்னும் ஒரு வாரத்திற்கு தக்காளியின் விலை இது போல தான் நீடிக்குமாம்.

" கடந்த வாரத்தில் 80 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி, தற்போது 15 ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப்படுவதால், வாடிக்கையாளர்களும் தக்காளியை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர் "