Egg Price Today - நாமக்கலில் இன்றைய தினத்திற்கான முட்டை விலை என்பது நான்கு ரூபாய்க்கும் கீழ் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்த வரை முட்டை என்றாலே நினைவிற்கு வருவது நாமக்கல் மாவட்டம் தான், பொதுவாக தமிழகத்தில் முட்டை விலை என்பது தினசரி நாமக்கல் சந்தை நிலவரம் பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது, தினசரி 6 கோடி முட்டைகள் நாமக்கலில் உற்பத்தி செய்யப்படுகிறது, தினசரி 4 கோடி முட்டைகளுக்கும் மேல் நாமக்கலில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் தமிழகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி நடைபெறுகிறது, முட்டை வர்த்தகம் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார வர்த்தகம் ஆக இருந்து வருகிறது, இந்தியாவின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 15.64% ஆக இருக்கிறது, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய முட்டை உற்பத்தி மையமாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் சந்தைகளில் முட்டை விலை என்பது 3.80 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, 30 முட்டைகள் உள்ள ஒரு ட்ரே மொத்த விலைக்கு 114 ரூபாய்க்கு நாமக்கலில் கொடுக்கப்படுகிறது, ரீட்டைல் கடைகளில் ஒரு முட்டை 4.03 முதல் 4.05 ரூபாய் வரை விற்கப்படுகிறது, சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு முட்டை 4.10 ரூபாய் என விற்கப்படுகிறது.
குறைந்த தேவை அதிகப்படியான உற்பத்தி என்ற இரண்டு காரணிகளும் ஒன்றுக்கொன்று மோதி முட்டை விலையை நான்கு ரூபாய்க்கும் கீழ் சரிய செய்து இருக்கின்றன, கடந்த நான்கு நாட்களாகவே நாமக்கலில் முட்டை விலை ஆனது நான்கு ரூபாய்க்கும் கீழ் தான் தொடர்கிறது, இன்னும் குறையவும் வாய்ப்பு இருப்பதாக முட்டை ஏஜென்சி தாரர்கள் கூறுகின்றனர்.