• India
```

தேங்காய் விலை...மள மளவென உயர்வு...ஒரு கிலோ மார்க்கெட்டில் ரூ 100 வரை விற்பனை...!

Coconut Price Hiked In Market

By Ramesh

Published on:  2025-01-28 16:47:35  |    340

Coconut Price Hiked In Market - தேங்காய் விலை மள மளவென உயர்ந்து கிலோ 100 ரூபாய் வரை விற்பனை ஆகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Coconut Price Hiked In Market - உலகளாவிய அளவில் அதிக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா இருக்கிறது, அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் பிலிப்பைன்ஸ், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது, உலகளாவிய அளவில் 32% தேங்காய் உற்பத்தி இந்தியாவில் தான் நடைபெறுவதாக ஒரு தகவல், இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

அந்த வகையில் தேங்காயின் விலை சமீப காலமாக தாறுமாறாக விலை ஏறி வருகிறது, பொங்கல் பண்டிகையை ஒட்டி தான் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்து தேங்காயின் விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது, சென்னையில் எல்லாம் ஒரு கிலோ தேங்காயின் விலை ரூ 100 வரை விற்கப்படுகிறதாம்.



இதற்கு என்ன காரணம் என்று தேங்காய் விவசாயிகளிடம் கேட்ட போது தென்னையை ஒரு சில வித்தியாசமான நோய் தாக்கி வருவதாக பதில் அளிக்கின்றனர், இரண்டு ஏக்கர் தென்னை பயிருக்கே 400 காய்கள் தான் விழுவதாக விவசாயிகள் கூறுகின்றனர், அதிலும் ஒரு சில காய்கள் வெம்மட்டையாக இருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்து இருக்கின்றனர்.

தேங்காய் விளைச்சல் கம்மியானதற்கு அதிகப்படியான மழையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது, பல தென்னை தோட்டங்களில் மண்கள் அரித்துச் செல்லப்பட்டதால் வேர் அதன் உறிஞ்சும் தன்மையை இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது, இந்த விளைச்சல் கம்மியானது தான் மார்க்கெட்டில் பிரதிபலித்து தேங்காயின் விலை உயர்ந்து இருக்கிறது என கூறப்படுகிறது.