• India
```

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் - எளிதாக ரூ.7,24,974 பெறலாம்!!

Post office Time Deposit savings scheme

By Dhiviyaraj

Published on:  2025-01-14 09:23:54  |    25

தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் அனைவருக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் சிறப்பாக பயன்பெறும் ஒரு திட்டமாக போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கருதப்படுகிறது. இந்த திட்டம் பாதுகாப்பான முதலீடாகவும், நிச்சய வட்டி வருமானத்துடனும் வரி சலுகைகளையும் வழங்குகிறது.

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப, பல்வேறு காலத்திற்காக பணத்தை முதலீடு செய்யலாம்.

1 ஆண்டு – 6.9% வட்டி

2 அல்லது 3 ஆண்டுகள் – 7% வட்டி 

5 ஆண்டுகள் – 7.5% வட்டி

5 ஆண்டுகளுக்கான முதலீடு, குறிப்பாக அதிக வட்டி விகிதத்துடன் வரி சலுகையை வழங்கும் சிறந்த தேர்வாகும்.

ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்:

வட்டி விகிதம்: 7.5%

மொத்த வட்டி வருமானம்: ரூ.2,24,974

முதிர்வு காலத்தில் பெறப்படும் மொத்த தொகை: ரூ.7,24,974 பெறலாம். அதாவது, நீங்கள் வட்டியிலேயே ரூ.2.25 லட்சம் வரை கூடுதல் வருமானம் பெற முடியும்!

இந்த போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை நிச்சயமாக பாதுகாக்க ஒரு சிறந்த தேர்வாகும்..