Who Is Shantanu Naidu How He Built Friendship With Ratan Tata - டாடா குழுமத்தின் முக்கிய தலைமையாக அறியப்படும் ரத்தன் டாடா மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் கடந்த அக்டோபர் 9 அன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கில் பலரும் வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்த போது ஒரே ஒரு முகம் மட்டும் கடைசி வரை ரத்தன் டாடாவின் உடலையே சுற்றிக் கொண்டு இருந்தது, அது தான் சாந்தனு நாயுடு, ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்கு உரிய உற்ற நண்பன் தான் அவர்.
சரி, யார் இந்த சாந்தனு நாயுடு?
சாந்தனு நாயுடு, புனேவில் பிறந்து வளர்ந்தவர், சாவித்திரி பாய் பூலே புனே பல்கலைக் கழகத்தில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு, அமெரிக்காவின் கார்னல் ஜான்சன் கல்லூரியில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் பிரிவில் மாஸ்டர் டிகிரியை முடிக்கிறார். படிப்பு முடித்த பின்னர் டாடா நிறுவனத்தின் எல்க்ஸி என்ற நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணிக்கு சேர்ந்தார், தற்போது டாடா குழுமத்தில் மிகவும் இளைய பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார், குட் பெல்லோஸ் என்ற நிறுவனத்தையும் தனியாக நடத்தி வருகிறார்.
சரி, ரத்தன் டாடாவிற்கும், சாந்தனு நாயுடுவிற்கும் நட்பு எப்படி மலர்ந்தது?
இருவருக்கும் இடையேயான நட்பு என்பது, இருவருக்கும் இடையில் இருக்கும் நாய்களின் மீதான அளாதி பிரியத்தால் தான் முதன் முதலில் மலர்ந்தது. அதாவது சாந்தனு நாயுடு நாய்களின் மீது அளாதி பிரியம் கொண்டவர், சாலைகளில் விபத்துக்கு உள்ளாகும் நாய்களை பாதுகாக்கும் வகையில், நாய்களின் கழுத்தில் மிளிறும் பேண்ட் ஒன்றை அணிவிக்கும் ‘மோட்டோபாக்ஸ்’ என்ற அமைப்பை கல்லூரி படிக்கும் போதே சாந்தனு நடத்தி வந்தார்.
தொடர்ந்து சாலையோர நாய்களை தத்தெடுக்கும் ஒரு அமைப்பை உருவாக்க நினைத்த சாந்தனு நாயுடுவிற்கு, கையில் பெரிய முதலீடு ஏதும் இல்லை, டாடாவிற்கு கடிதம் எழுத சொல்லி அனைவரும் கூறி இருக்கின்றனர், முதலில் தயங்கிய சாந்தனு, பின்னர் எழுதி அனுப்பி விட்டார், கிட்ட தட்ட இரண்டு வாரங்கள் கழித்து சாந்தனுவிற்கு, ரத்தன் டாடாவிடம் இருந்து அழைப்பு வருகிறது. மும்பையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருவரும் சந்திக்கின்றனர்.
சாந்தனுவின் இரக்கம் ரத்தன் டாடாவை உருக்கவே, இருவருக்கும் இடையிலான முதல் நட்பு அங்கு தான் மலர்ந்தது, சாந்தனுவின் எண்ணத்திற்கும் டாடா உருவம் கொடுத்தார், 2016 முதல் 2018 வரை இருவரும் நட்பை பராஸ்பரமாக பகிர்ந்து கொள்ள, அது நட்பில் ஒரு புதிய பரிணாமத்தையே தோற்றுவித்தது, கிட்ட தட்ட 2018 -ற்கு பின்னர் ரத்தன் டாடாவின் அசிஸ்டண்டாகவே மாறி விட்டார் சாந்தனு நாயுடு, கடைசியாக தனது 84 ஆவது பிறந்தநாளை கூட ரத்தன் டாடா, சாந்தனு நாயுடுவுடன் தான் கொண்டாடி இருந்தார்.
" சாந்தனு நாயுடுவும் தனியாக குட் பெல்லோவ்ஸ் என்ற காப்பக நிறுவனத்தை நடத்தி வருகிறார், கடைசி காலத்தில் கைப்பிடிப்பு இன்றி தவிக்கும் முதியோர்களை எல்லாம், அந்த நிறுவனத்தின் மூலம் இரக்கத்துடன் பாதுகாத்து வருகிறார், இந்த விடயத்தில் ரத்தன் டாடாவையும், சாந்தனுவையும் ஒன்று சேர்த்தது நட்பா, இரக்கமா என்ற கேள்விக்கு விடை கேட்டால், நிச்சயம் மனிதம் என்று தான் சொல்ல வேண்டும் “