கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பரவிய காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. அதிகாரிகளின் தகவலின்படி, ஈட்டன் பகுதியில் 11 பேர் மற்றும் பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலத்த காற்று காரணமாக தீயை அணைக்க முடிவதிலே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காலபாசாஸுக்கு அருகிலுள்ள கென்னத் பகுதி காட்டுத் தீ இதுவரை 80 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
அதேபோல், சான் ஃபெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள ஹுர்ஸ்ட் பகுதியில் பரவிய தீ 76 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 800 ஏக்கர் நிலப்பரப்பு தீயால் சேதமடைந்துள்ளது.
அமெரிக்காவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் தங்களது தீயணைப்பு வீரர்களை அனுப்பி உதவியுள்ளன. இவை தீயை வேகமாக அணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
ஜே பி மார்கன் நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, இந்த காட்டுத் தீயால் காப்பீடு பெற்ற சேதம் 20 பில்லியன் டாலர்களாகவும், மொத்தத்தில் இந்திய மத்தியில் ரூ 1.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.