ரேஷன் கார்ட் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. அதனை பயன்படுத்தி அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் வாங்க முடியும். அதுமட்டுமின்றி,
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசின் மற்ற திட்டங்களில் உதவி கிடைக்கிறகளில். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு போன்ற பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன.
சமீபகாலமாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தும் மக்களுக்கு அவ்வப்போது பல வகையான அப்டேட்கள் கொடுத்து வருகின்றன. அதற்கேற்ப விதிமுறைகளை அரசு மாற்றி வருகிறது. இந்த சூழல் ரேஷன் கார்ட் அப்டேட்கள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரேஷன் கார்ட் பயன்படுத்தும் அனைவரும் KYC லிங்க் செய்திருக்க வேண்டும். தற்போது இந்த விஷயம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக KYC லிங்க் செய்ய வேண்டும். விரைவில் இந்த அப்டேட்டை செய்ய வேண்டும் இல்லை என்றால் ரேஷன் கார்டில் எதுவும் வாங்க முடியாது.