India And America Tax War - அதிபர் ட்ரம்ப்பின் கட்டளைகளுக்கு பணிந்து இறக்குமதி வரியை இந்தியா, ஜீரோ ஆக்க திட்டம் இட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இனி எங்களுக்கு என்ன வரி விதிக்கிறீர்களோ அதே வரி உங்களுக்கும் விதிக்கப்படும், எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அமெரிக்காவை அதிகம் வஞ்சிக்கின்றன, இனி எங்கள் பொருள்களுக்கு நீங்கள் அதீத வரி விதித்தால், உங்கள் பொருள்களுக்கும் இங்கு பரஸ்பர இறக்குமதி வரி விதிக்கப்படும், என ட்ரம்ப் வரி குறித்து பல எச்சரிக்கைகளை தொடர்ந்து விடுத்து வருகிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் நாட்டின் பொருள்களின் மீதும் பரஸ்பர வரி விதிப்பது குறித்து ட்ரம்ப் கடுமையாக பேசி இருந்தார், இதற்கு சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து இருந்த போதும், இந்தியா மட்டும் அமைதியாக அமெரிக்கா பேசும் அத்துனைக்கும் இசைவு கொடுத்து வருகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் இந்தியாவில் நேரடி விற்பனையகம் அமைக்க முயற்சித்து வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த வரி அழுத்தம் என்பது எலான் மஸ்க்கிற்கு சாதகமாக செயல்படவும் தான் எனவும் கூறப்படுகிறது, அதாவது அமெரிக்க கார்களுக்கு இந்தியாவில் 110 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது, இதனை ஜீரோ ஆக்குவது தான் ட்ரம்பின் திட்டமாம்.
அதாவது எலான் மஸ்க் இந்தியாவில் ஜீரோ சதவிகித இறக்குமதி வரியுடன் கார்களை இறக்கி, இந்திய சந்தையில் டெஸ்லாவை விரிவுபடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதவி புரிகிறார் என்பது போல தான் இந்த வரி விதிப்புகள் இருக்கின்றன, ஒரு வேளை அமெரிக்க பொருள்கள் அனைத்திற்கு வரி விதிப்பு குறைக்கப்படும் பட்சத்தில் இந்திய சந்தைகளில் இந்திய பொருள்கள் காற்று வாங்கும்.
" இந்தியா தொடர்ந்து இந்த விடயத்தில் அமைதி காக்காமல் சீனா, கனடா போன்று தங்கள் சார்பில் இருக்கும் கண்டனங்களை அமெரிக்காவிற்கு தெரிவிக்க வேண்டும் என்பது பலரின் எண்ணங்களாக இருக்கின்றன "