• India
```

உலகளாவிய ஒட்டு மொத்த தங்கத்தில்...11 சதவிகித தங்கத்தை கொண்டு இருக்கும்...இந்திய பெண்கள்...!

Word Largest Consumer Of Gold

By Ramesh

Published on:  2025-01-01 16:16:35  |    143

Word Largest Consumer Of Gold - உலகளாவிய அளவிலான ஒட்டு மொத்த தங்கத்தில், 11 சதவிகிதம் தங்கத்தை இந்திய பெண்கள் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Word Largest Consumer Of Gold -  பிரபல ஆக்ஸ்போர்டு கோல்டு குரூப் உலகளாவிய அளவிலான அதிக தங்கம் கொண்ட நாடுகள் குறித்த ஒரு ஆய்வை நிகழ்த்தி இருக்கிறது, தங்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணியாக விளங்குகிறது, உலகளாவிய அளவில் சீனா தங்க உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கிறது, ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்தையும், ரஷ்யா மூன்றாம் இடத்திலும் இப்பட்டியலில் இருக்கின்றன.

உலகளாவிய அளவில் அதிக அளவிலான தங்கத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக ஸ்விட்சர்லாந்து இருக்கிறது, உலகளாவிய அளவில் அதிக தங்க நுகர்வோர்கள் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது, ஒட்டு மொத்த உலகளாவிய தங்க பயனாளர்களில் இந்திய பெண்கள் 11 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டு இருப்பதாக ஆக்ஸ்போர்டு அறிக்கை கூறுகிறது.



ஒட்டு மொத்தமாக இந்திய பெண்களிடம் மட்டும் 24,000 மெட்ரிக் டன்கள் தங்கம் இருக்கிறதாம், அதற்கு அடுத்தபடியாக அதிக தங்கம் கொண்ட நாடுகளில் அமெரிக்கா இருக்கிறது, அமெரிக்காவிடம் 8,133 டன்கள் தங்கம் இருப்பதாக தகவல், ஜெர்மனி 3,362 டன்கள் தங்கமும், இத்தாலியிடம் 2,451 டன்கள் தங்கமும், பிரான்ஸ்சிடம் 2,346 டன்கள் தங்கமும், ரஷ்யாவிடம் 2,298 டன்கள் தங்கமும் இருப்பதாக தகவல்.

இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த தங்கத்தில் தென் இந்தியாவிடம் மட்டும் 40% தங்கம் இருக்கிறதாம், அதும் தமிழகம் மட்டும் 28% தங்கத்தை தன்னகத்தே கொண்டு இருக்கிறதாம், இந்தியாவின் GDP யை நிர்ணயிக்கும் காரணிகளுள் தங்கம் 40% இடத்தை பிடித்து இருக்கிறது, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக தங்கம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.