• India
```

அதிக கடன் பெறும் மாநிலங்களுள்...தமிழகத்திற்கு முதலிடம்...ரூ 5 இலட்சம் கோடி வரை கடன் பெற்று இருப்பதாக தகவல்...!

Tamil Nadu Becomes Top In Debt List

By Ramesh

Published on:  2025-01-22 09:29:05  |    109

Tamil Nadu Becomes Top In Debt List - அதிக கடன் பெறும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை வகிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Tamil Nadu Becomes Top In Debt List - பொதுவாக ஒவ்வொரு மாநிலங்களும் தங்களது உள் கட்டமைப்பிற்காக கடன் பெறுவது என்பது வழக்கமான ஒன்று தான், அந்த வகையில் ஒவ்வொரு மாநிலங்களும் கடன்களை பெற்று தங்களது உள்கட்டமைப்புகளை வடிவமைத்துக் கொள்கின்றன, உள்கட்டமைப்புகளை கடந்து ஒரு சில சேவைகளுக்காகவும், திட்டங்களுக்காகவும் அந்த பணத்தை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எல்லா திட்டங்களும் பண ரீதியான திட்டங்களாக இருப்பதால் மாநிலத்தில் நிதிப்பற்றாக்குறை என்பது மேலோங்குகிறது, உள்கட்டமைப்புகளை கடந்து சேவைகளும், திட்டங்களும் தான் அதிக நிதியை எடுத்துக் கொள்வதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, சரி இந்த சேவைகளையும் திட்டங்களையும் வரிகள் மூலம் செய்திட முடியாதா என்றால் முடியாது தான்.



இங்கு திட்டங்களும், சேவைகளும், உள்கட்டமைப்புகளும் வரியை தாண்டிய செலவாக தான் இருக்கிறது, இந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழகத்தின் உள் கட்டமைப்பிற்காக ஆளும் அமைப்பினர் 5 இலட்சம் கோடி வரை கடன் பெற்று இருக்கின்றனராம், இதனால் தமிழகம் அதிக கடன் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருப்பதாக தெரிகிறது.

இது குறித்து ஆளும் தரப்பு கூறுகையில் தமிழகம் ஒரு சில முக்கிய உள்கட்டமைப்புகளுக்காக தான் அதிக செலவிட்டு வருகிறது, அதற்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் தான் தமிழகம் கடன் வாங்கி இருக்கிறது, கடன் தொகை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்தப்படும் என அரசு சார்பில் கடன் குறித்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.