• India
```

கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி...உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா...?

Reliance Industries Seeking Big Loan

By Ramesh

Published on:  2024-12-13 02:23:31  |    542

Reliance Industries Seeking Big Loan - முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக அறியப்படுகிறது, கிட்டதட்ட 3,47,362 பணியாளர்களை கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் பல தொழில்களை கையாண்டு வருகிறது, நிகழ் நிதி ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் 120 பில்லியன் USD வருமானத்தை ஈட்டி இருக்கிறது.

அதில் நிறுவனத்தின் நிகர இலாபம் மட்டும் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கலாம் என கூறப்படுகிறது, அதே சமயத்தில் கடந்த செம்படம்பர் 2024 நிலவரப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் என்பதும் 39.60 பில்லியன் டாலர்களாக இருக்கிறது, இது வட்டியை சேர்க்காமல் என்னும் போது வட்டியை சேர்த்தால் இன்னும் கடன் தொகை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.



இந்த கடன் தொகை நிறுவனத்தின் நிகர வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது, அதே சமயத்தில் நிகர இலாபத்தை விட 4 மடங்குகள் இருக்கிறது, இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது, அதாவது தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்து வருவதால், வங்கிகள் மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து கடனை வசூலிக்க அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன.

இதில் ரிலையன்ஸ் நிறுவனமும் அடங்கும் என்பதால், ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகைகளையும் வங்கிகள் தற்போது துரத்தி வருகின்றன, இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் வருகின்ற முதல் காலாண்டின் கடன் நிலுவைத் தொகையை அடைக்க பிற வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து 25,500 கோடி கடன் வாங்க திட்டமிட்டு இருக்கிறதாம், கடன் பெறுவதற்கான முடிவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது.

" ரிலையன்ஸ் தொடர்ந்து இந்திய வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் கொள்கை முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது "