• India

கிட்ட தட்ட 46 கோடி அளவிற்கு..சம்பளத்தை குறைத்த மைக்ரோசாப்ட் CEO சத்யா நடெல்லா..காரணம் என்ன..?

Microsoft's CEO Has Slashed His Salary

By Ramesh

Published on:  2024-11-02 01:17:53  |    200

Microsoft's CEO Has Slashed His Salary - சத்யா நடெல்லா 2014 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார், உலகின் தலை சிறந்த தலைமைகளுள் ஒருவராக அறியப்படும் சத்யா நடெல்லா, உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரிகளுள் ஒருவராக அறியப்படுகிறார், அவரது வருடாந்திர சம்பளம் மட்டும் தற்போது கிட்டதட்ட 80 மில்லியன் டாலராக இருக்கும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் சத்யா நடெல்லாவின் சம்பளம் என்பது நடப்பு ஆண்டில் கிட்டதட்ட 63 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது நடப்பு ஆண்டில் அவரது சம்பளம் மட்டும் 665 கோடியை தாண்டுமாம், மைக்ரோசாப்டின் இந்த சம்பள அறிவிப்பு வந்ததுமே சத்யா நடெல்லா அவர் தரப்பில் ஒரு விடயத்தை கூறி இருப்பது தான் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.



அதாவது அவருடைய சம்பளத்தில் கிட்டதட்ட 46 கோடியை அவர் திருப்பி செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது, அவர் தற்போது சம்பளமாக பெற இருக்கும் 79.106 மில்லியன் டாலரில் (இந்திய மதிப்பில் 665 கோடி) கிட்ட தட்ட 46 கோடியை திரும்ப செலுத்த இருக்கிறாராம், சத்யா நடெல்லாவின் இந்த முடிவு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டும் அல்லாது உலகளவில் பேசு பொருளாகி வருகிறது.

சரி, ஏன் அவர் திருப்பி செலுத்துகிறார் என்றால் நடப்பு ஆண்டில் மைக்ரோசாப்ட் பல வித பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது, சைபர் செக்யூரிட்டி அட்டாக், சீனாவின் ஹேக்கர்ஸ் உட்புகல், ப்ளு ஸ்க்ரீன் டெத் என பல பிரச்சினைகள் மைக்ரோசாப்டின் பெருமளவு இலாபத்தையும், நம்பகத்தன்மையையும் பாதித்தது, இதற்கு பொறுப்பேற்று கொண்டே சத்யா நடெல்லா தனது சம்பளத்தில் ஒரு பங்கை திருப்பி செலுத்துவதாக தகவல்.