Apple India Sets New Record In Revenue - சர்வதேச அளவில் மொபைல்கள் மற்றும் எலக்ட்ரானிக் கேட்ஜட்ஸ் வடிவமைப்பில் முன்னனி நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவிலும் தங்களது சந்தையை வேக வேகமாக விரிவு படுத்தி வருகிறது, கிட்டதட்ட கேட்ஜட்ஸ் வடிவமைப்பில் 50 வருட அனுபவம் கொண்டு இருக்கும் ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய அளவில் 531 ஸ்டோர்களை கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இரண்டே இரண்டு ஸ்டோர்களை மட்டும் கொண்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவனம், மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் Apple BKC என்று ஒரு ஸ்டோரும், டெல்லி சிட்டி வால்க் சென்டரில் Apple Saket என்று ஒரு ஆப்பிள் ஸ்டோரும் செயல்பட்டு வருகிறது, மேலும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் கேட்ஜட்கள் இந்தியாவில் கிடைக்கிறது.
இந்தியாவில் இரண்டே இரண்டு ஸ்டோர்கள் இருந்தாலும் கூட இந்தியர்கள் ஆப்பிள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை என்பது அளப்பரியது, அந்த நம்பிக்கை தான் ஆப்பிள் நிறுவனம் இதுவரை இந்தியாவில் பார்த்திராத வருமானத்திற்கு சான்று, அதாவது இந்த ஆண்டின் நான்காவது கால் இறுதியில் மட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் 94.9 பில்லியன் டாலரை நெருங்கி இருக்கிறதாம்.
அதாவது இந்தியாவில் பல ஸ்டோர்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருக்கும் ஜியோமி நிறுவனம் 77 சதவிகிதம் வருமானத்தை இழந்து இருக்கும் போது, சாம்சங் நிறுவனம் 86,000 கோடி மட்டுமே வருமானம் ஈட்டி இருக்கும் போது, ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் கிட்டதட்ட 100 பில்லியன் டாலரை நெருங்கி இருக்கிறது, இந்த புத்துணர்ச்சியோடு ஆப்பிள் மேலும் 4 ஸ்டோர்களை இந்தியாவில் திறக்க இருக்கிறதாம்.