R Wallet Ticket Booking Cashback Offers - பயனர்கள் R Wallet பயன்படுத்தி ரயில் டிக்கெட் எடுத்தால் 3 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்து இருக்கிறது.
R Wallet Ticket Booking Cashback Offers - இந்திய ரயில்வே, டிக்கெட்டிங் பிராசசை முழுமையாக டிஜிட்டல் ஆக்க பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது, அந்த வகையில் முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை எடுக்க UTS என்னும் செயலியை அறிமுகப்படுத்தி இருந்தது, இந்த செயலியின் மூலம் பயணிகள் ஸ்டேசனில் இருந்து கொண்டு டிஜிட்டலாக முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை பெற முடியும்.
இந்த செயலி மொபைலில் இருக்கும் பட்சத்தில் பயனர்கள் கவுன்டர் டிக்கெட்டுகளை எடுக்க ஸ்டேசன்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, இது போக UTS செயலில் R Wallet என்ற ஆப்சனும் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது, பயனர்கள் R Wallet யில் 1000 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1030 ரூபாய் ஏறும் வகையில் 3 சதவிகிதம் ஆபர் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த R Wallet தொகையை, பயணிகள் UTS செயலியின் மூலம் டிக்கெட் எடுக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம், அதே சமயத்தில் ஸ்டேசன்களில் இருக்கும் டிக்கெட் வெண்டிங் மெசின்களில் பே பண்ணவும் இந்த R Wallet தொகையை பயன்படுத்திக் கொள்ள முடியும், தற்போது இந்த R Wallet ரீசார்ஜில் ஒரு சிறிய மாற்றத்தை ரயில்வே கொண்டு வந்து இருக்கிறது.
முதலில் R Wallet க்கு ரீசார்ஜ் செய்தால் 3% சலுகை அளித்த ரயில்வே துறை, தற்போது R Wallet மூலம் எடுக்கும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 3% சலுகை என அறிவித்து இருக்கிறது, இதன் மூலம் முதலில் பயனர்கள் R Wallet யில் ஒரு குறிபிடத்தக்க தொகையை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறை டிக்கெட் எடுக்கும் போது 3% சலுகையை டிக்கெட்களுக்கு பெறலாம்.