Village Weekly Market - பொதுவாக நகர்ப்புற மக்களுக்கு அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள எளிதான வகையில் எல்லா கடைகளும் அருகிலேயே இருக்கும், ஆனால் கிராமப்புற மக்களுக்கு அப்படி அல்ல, ஒரு பொருளை தேவையான பொருளை வாங்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர்கள் பயணித்து பல கடைகளை தேடி அலைந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இன்னொரு விடயம் கிராமப்புறங்கள் தான் பல அத்தியாவசியங்களின் தயாரிப்பகம் ஆகவும் இருக்கிறது, தயாரிப்புகள் அதிகம் ஆக இருந்தாலும் கூட அதை சரியான முறையில் சந்தைப்படுத்த முடியாமலும் மக்கள் திணறி நிற்கின்றனர், இதற்கெல்லாம் தீர்வாக சுமார் 200 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே கொண்டு வரப்பட்டது தான் வாராந்திர சந்தைகள்.
பொதுவாக இந்த வாராந்திர சந்தைகள் வாரத்திற்கு ஒரு முறை என ஒரு கிராமத்தின் மையத்தில் வைக்கப்படும், காய்கறிகள், பலசரக்குகள், பண்டங்கள், ஆடுகள், கோழிகள், மாடுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் அதுவும் மலிவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும், கிராமப்புற தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் இந்த சந்தைகளில் கலந்து கொண்டு தங்களது பொருட்களை சந்தைப்படுத்துவர்.
200 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த சந்தைகள் வாரத்திற்கு ஒரு நாள் என ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு தினங்களிலும் நடைபெறும், ஒரு நாளில் இந்த சந்தையின் பொருளாதாரம் என்பது ஒரு நகரத்தில் இருக்கும் இரண்டு மால்களின் தினசரி வருமானத்தை தாண்டும் என கூறப்படுகிறது, உதாரணத்திற்கு ஓமலூர் சந்தையை எடுத்துக் கொள்ளலாம்.
" ஆடு மாடு சந்தைகளாக நடக்கும் ஓமலூர் சந்தை தினசரி 7 கோடி முதல் 10 கோடி வரை புழங்கும் சந்தையாக இருக்கிறது, வெளிமாநிலங்களில் இருந்தும் ஓமலூர் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது "