• India
```

உலகின் இரண்டாவது அதிக சம்பளம் பெறும் CEO !அவரின் சொத்து மதிப்பு ரூ. 8,500 கோடி..யார் அவர்?

Top Highest Paid CEO in The World | Highest Paid CEO in The World Per Month

By Dharani S

Published on:  2024-09-25 12:12:22  |    206

Top Highest Paid CEO in The World-அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் 2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் CEO-களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர் நிகேஷ் அரோரா.இவரது சம்பளம் நாளுக்கு ரூ. 35 லட்சம் ஆகும்.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் 2023ம் ஆண்டின் அதிக சம்பளம் பெறும் CEO-களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர் நிகேஷ் அரோரா.
ஐ.ஐ.டி பட்டதாரியான நிகேஷ் அரோரா, தற்போது பெரும் கோடீஸ்வரர்களின் வட்டத்துடன் இணைந்துள்ளார். அவர் தற்போது Palo Alto Networks நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு, அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறும் நபர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

1989ல் காஜியாபாத்தைச் சேர்ந்த நிகேஷ், ஐ.ஐ.டி வாரணாசியில் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் MBA பட்டம் பெற்று, கூகிள் நிறுவனத்தில் சுமார் பத்தாண்டுகள் பணியாற்றினார். 2014ல் கூகிள் விலகி, ஜப்பானின் SoftBank நிறுவனத்தில் இணைந்தார். 2018 முதல் Palo Alto Networks நிறுவனத்தின் CEO ஆக உள்ளார்.



புதிய தகவலின் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளில் Palo Alto Networks நிறுவனத்திடம் இருந்து 33.5 மில்லியன் டொலர்கள் சம்பளமாக பெற்றுள்ளார். 2021 நிதியாண்டில் ரூ. 173.4 கோடி, 2022ல் ரூ. 82.7 கோடி சம்பளமாக பெற்றார். மொத்தம் ரூ. 256.1 கோடியை இரண்டு ஆண்டுகளில் சம்பளமாகப் பெற்றுள்ளார், இது நாளுக்கு ரூ. 35 லட்சம் ஆகிறது. 2022ல் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நிகேஷ் அரோராவின் சொத்து மதிப்பு ரூ. 8,500 கோடியாக மதிக்கப்படுகின்றது.