Top Gainers And Losers Today In Share Market - இன்றைய மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இறக்கத்திலேயே ஆரம்பித்து, இறக்கத்திலேயே முடிவடைந்து இருக்கின்றன, மும்பை பங்கு சந்தையில், கிட்ட தட்ட 3,615 நிறுவனங்கள் இறக்கத்தை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட ஒரு 589 நிறுவனங்கள் மற்றுமே ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன.
தேசிய பங்குச்சந்தையிலும் அதே நிலை தான் பிரதிபலிக்கிறது, கிட்ட தட்ட 2,445 நிறுவனங்கள் இழப்பை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட 222 நிறுவனங்கள் மற்றுமே ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன. அதாவது எப்போதும் இல்லாத அளவிற்கு பெருவாரியான மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து இருப்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சமநிலையை உடைக்கும் விதமாக இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தையில் (சென்செக்ஸ்) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்
இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: பஜாஜ் பைனான்ஸ் (4.95%), டெக் மஹிந்திரா (2.01%), டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (1.27%), HDFC வங்கி (1.26%), HCL டெக்னாலஜிஸ் (1.16%)
நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா (3.23%), சன் பாராமெச்சூட்டிகள் (2.79%), பவர் க்ரிட் கார்பரேசன் (1.86%), NTPC (1.74%), லார்சன் & டர்போ (1.56%)
தேசிய பங்குச்சந்தையில் (நிஃப்டி) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்
இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: பஜாஜ் பைனான்ஸ் (4.84%), டெக் மஹிந்திரா (2.14%), டாட்டா கன்ஸ்சியூமர் (1.78%), பஜாஜ் ஆட்டோ (1.75%), HDFC வங்கி (1.36%)
நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா (3.29%), சன் பாராமெச்சூட்டிகள் (2.69%), ஈச்சர் மோட்டார்ஸ் (2.07%), ஸ்ரீ ராம் பைனான்ஸ் (1.86%), NTPC (1.84%)