Top 10 Automobile Companies In World- உலகின் டாப் 10 வாகன உற்பத்தி நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் இடம் பெற்றுள்ளது.இதன் சந்தை மதிப்பை பற்றி பார்க்கலாம்.
Top 10 Automobile Companies In World-டாடா மோட்டார்ஸ், இது இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகும், ரூ.4.27 லட்சம் கோடி அதாவது,51 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன், உலகின் டாப் 10 வாகன உற்பத்தி நிறுவனங்களில் டாடாவும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ஜூலை 31-ம் தேதி அடிப்படையில், டாடா மோட்டார்ஸ் சந்தை மதிப்பு ரூ.4.27 லட்சம் கோடியை தொட்டது இதன் மூலம், நாட்டின் மிகவும் அதிக மதிப்புள்ள வாகன உற்பத்தி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் பங்குகள் 50% உயர்ந்து இருப்பதால், 2023-ம் ஆண்டு 101% உயர்வைப் பெற்றுள்ளது.
மேலும், டாடா மோட்டார்ஸ் சர்வதேச அளவிலான டாப் 10 வாகன உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டெஸ்லா 711 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் முதல் இடம் பிடித்திருக்கிறது. அதை தொடர்ந்து டொயோட்டா (307 பில்லியன் டாலர்), பிஓய்டி கம்பெனி (92 பில்லியன் டாலர்), பெராரி என்வி (74 பில்லியன் டாலர்), மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் குழுமம் (71 பில்லியன் டாலர்) இவைகள் முதல் 5 இடம் பிடித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ், ஸ்டெல்லன்டிஸ் என்வி, ஜெனரல் மோட்டார்ஸ், மாருதி சுசூகி இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, போர்டு மோட்டார், ஹுண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப்பரேஷன் இவைகளை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகுக்கிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2