• India
```

குறைந்தது ஆபரணத்தங்கத்தின் விலை..தவறாம இன்னிக்கே தங்கம் வாங்கிடுங்க..!

Today Gold Rate In Tamil

By Ramesh

Published on:  2024-11-07 17:50:35  |    179

Today Gold Rate In Tamil - இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு 1,320 ரூபாய் வீதம் குறைந்து இருக்கிறது.

Today Gold Rate In Tamil - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,365 என்று இருந்த நிலையில், இன்று கிராமிற்கு 165 ரூபாய் வீதம் குறைந்து 7,200 ருபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,891/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,855/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.

18 காரட் தங்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு ஆறாயிரத்திற்கும் கீழ் குறைந்து இருக்கிறது, அதே போல 24 காரட் தங்கமும் நீண்ட நாட்களுக்கு பிறகு எட்டாயிரத்திற்கும் கீழ் வந்து இருக்கிறது, ஆபரணத்தங்கம் பவுனுக்கு ஆயிரத்திற்கும் மேல் குறைந்து இருப்பதால் தங்க முதலீட்டாளர்கள் நிச்சயம் எப்படியும் இன்று தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்,



வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 105 என இருந்த நிலையில், இன்று ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு மூன்று ரூபாய் வீதம் குறைந்து ரூ 102 க்கு விற்கப்படுகிறது, ஒரு கிலோ வெள்ளி ஆனது 10,200 ரூபாய் என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.

“ ஆபரணத்தங்கத்தின் விலை நீண்ட மாதங்களுக்கு பிறகு பவுனுக்கு ரூ 1320 வரை குறைந்து இருப்பதால் தங்க நகை வாங்க நினைக்கும் பயனாளர்கள் சற்றே கொஞ்சம் நிம்மதி பெருமூச்சி விட்டு இருக்கின்றனர் ”