Share Market Update Today Tamil - மும்பை பங்குச்சந்தையின் குறியீடான சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் துவங்கி, ஆரம்பித்த புள்ளியைக் காட்டிலும் சற்றே குறைந்து இறக்கத்தில் முடிவடைந்து இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை - சென்செக்ஸ்
இன்றைய மும்பை பங்கு சந்தை, 81,832.66 புள்ளிகளில் துவங்கி 81,611.41 புள்ளிகளில் முடிவடைந்து இருக்கிறது, நேற்றைய தினத்தின் முடிவை (81,467.10) காட்டிலும் 144.31 புள்ளிகள் உயர்ந்து இருக்கிறது, ஆனாலும் கூட, இன்று ஆரம்பித்த புள்ளியை காட்டிலும், சற்றே சரிவில் தான் முடிவடைந்து இருக்கிறது. சபரிமாலா இண்டஸ்ட்ரீஸ் இந்தியா என்ற நிறுவனம் அதிகபட்சமாக 20 சதவிகிதம் இலாபத்தை பெற்று இருக்கிறது.
நியூலைட்ஸ் அப்பாரல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக 89.80 சதவிகிதம் வரை சரிந்து அதீத நஷ்டத்தை அடைந்து இருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்றைய நிலவரப்படி கிட்டதட்ட 2,749 நிறுவனங்கள் ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன, 1,426 நிறுவனங்கள் சரிவை சந்தித்து இருக்கின்றன, 102 நிறுவனங்களின் பங்கில் எந்த மாற்றமும் இல்லை
தேசிய பங்குச்சந்தை - நிஃப்டி
தேசிய
பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி நேற்றைய தினத்தை விட 0.07 சதவிகிதம் உயர்ந்து 24,998.45 புள்ளிகளில் முடிவடைந்து இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை 1,778 நிறுவனங்கள் ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன, 869 நிறுவனங்கள் சரிவை சந்தித்து இருக்கின்றன, 42 நிறுவனங்களின் பங்குகளில் எந்த வித மாற்றமும் இல்லை.