Top Gainers And Losers Today In Share Market - இன்றைய மும்பை பங்குச்சந்தை ஏற்றத்திலும், தேசிய பங்குச்சந்தை இறக்கத்திலும் ஆரம்பித்து மாலையில் முறையே மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை என இரண்டும் இறக்கத்திலேயே முடிவடைந்து இருக்கின்றன.
Top Gainers And Losers Today In Share Market - இன்றைய மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இறக்கத்திலேயே முடிவடைந்து இருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர், மும்பை பங்கு சந்தையில், கிட்ட தட்ட 1,915 நிறுவனங்கள் இறக்கத்தை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட ஒரு 2,217 நிறுவனங்கள் மற்றுமே ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன.
தேசிய பங்குச்சந்தையிலும் அதே நிலை தான் பிரதிபலிக்கிறது, கிட்ட தட்ட 1,149 நிறுவனங்கள் இழப்பை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட 1,495 நிறுவனங்கள் மற்றுமே ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன. மும்பை பங்கு சந்தையில் 129 நிறுவனங்களில் பங்களில் எந்த மாற்றமும் இல்லை, தேசிய பங்குச்சந்தையில் 35 நிறுவனங்களின் பங்குகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச்சந்தையில் (சென்செக்ஸ்) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்
இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: அல்ட்ரா டெக் சிமெண்ட் (2.77%), மஹிந்திரா & மஹிந்திரா (1.35%), டைட்டன் கம்பெனி (1.28%), ஸ்டேட் பாங் ஆப் இந்தியா வங்கி (1.15%), NTPC (0.86%)
நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ஹிந்துஸ்தான் யூனிலிவர் (5.83%), நெஸ்ட்லே இந்தியா (2.88%), ITC (1.81%), மாருதி சுசுகி இந்தியா (1.61%), ஆசியன் பெயிண்ட்ஸ் (0.65%)
தேசிய பங்குச்சந்தையில் (நிஃப்டி) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்
இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: அல்ட்ரா டெக் சிமெண்ட் (2.70%), ஸ்ரீ ராம் பைனான்ஸ் (1.48%), டைட்டன் கம்பெனி (1.29%), கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (1.27%), மஹிந்திரா & மஹிந்திரா (1.18%)
நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ஹிந்துஸ்தான் யூனிலிவர் (5.80%), எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் கம்பெனி (4.70%), ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (3.68%), நெஸ்ட்லே இந்தியா (2.94%), பஜாஜ் ஆட்டோ (2.68%)