• India
```

என்ன தான் ஆச்சு நம்ம பங்கு சந்தைக்கு...6 இலட்சம் கோடிகளை இழந்த முதலீட்டாளர்கள்..!

Reason For Share Market Down

By Ramesh

Published on:  2024-10-17 13:28:10  |    189

Reason For Share Market Down - தொடர் பங்குச்சந்தை சரிவால், ஒரே நாளில் பங்குச்சந்தையில் 6 இலட்சம் கோடிகளை இழந்து இருக்கின்றனர் முதலீட்டாளர்கள்.

Reason For Share Market Down - மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் ஒரே நாளில் 494.75 புள்ளிகள் இறக்கத்தை சந்தித்து இருக்கிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி ஒரே நாளில் 22.45 புள்ளிகள் இறக்கத்தை சந்தித்து இருக்கிறது. இன்றைய நாள் முடிவில் நெஸ்ட்லே, மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குகள் பயங்கரமாக அடி வாங்கி இருக்கின்றன. இன்போசிஸ், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்கள் இலாபத்தில் முடிவடைந்து இருக்கின்றன.

சரி, பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

சீனாவின் கவர்ச்சிகரமான பங்குகளால், பல வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவில் இருந்து, சீனாவின் பக்கம் திரும்பி இருக்கின்றன, மேற்கு ஆசியாவில் நிலவும் பொருளாதார பதற்றமும் இந்திய பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகிறது, Q2 வருவாய் மூலதனம் சந்தைகளில் பெரிதாக ஈர்க்கப்படாததும் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகி இருக்கிறது. 


இன்னும் ஒரு சில பொருளாதார நிபுணர்கள் பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருப்பது அந்நிய மூலதன வெளியேற்றம் தான் என்கின்றனர், பல்வேறு முக்கியமான துறைகளின் விற்பனைகள், அதிகமான வாராக் கடன்கள், பலவீனமான Q2 சந்தை முடிவு உள்ளிட்டைவைகள் தான் தொடர்ந்து பங்குச்சந்தையை மேலும் மேலும் பலவீனப்படுத்தி வருகின்றன.

" ஒரே நாளில் 6 இலட்சம் கோடியை பங்குச்சந்தையில் இழந்து இருக்கும் முதலீட்டாளர்கள், இனி பங்குச்சந்தையில் இலாபம் பார்க்க வேண்டும் எனில், வெளியேற்றம் அடைந்த அந்நிய மூலதனங்கள் எல்லாம் மீண்டும் இந்திய சந்தைக்கு திரும்ப வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள் "