Jasmine Rate Today - தசரா, சரஸ்வதி பூஜை என வரிசையாக பண்டிகை தினங்கள் வருவதால், பூ மார்க்கெட்டுகளில் மல்லி விலையானது கிடு கிடுவென உயர்ந்து இருக்கிறது.
Jasmine Rate Today - தேசம்
முழுக்க தசரா மற்றும் நவராத்திரி பூஜை சிறப்பாக நடை பெற்றும் நிலையில், வரும் வெள்ளிக் கிழமை சரஸ்வதி பூஜை நிகழ்வும் கொண்டாடப்பட இருக்கிறது. தொடர்ந்து பண்டிகை தினங்கள் வந்து கொண்டே இருப்பதால் மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் சரமாரியாக உயர்ந்து வருகிறது, ஏற்கனவே தேங்காயின் விலை நூறு ரூபாயை நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் பூக்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது.
இரண்டு
தினங்களுக்கு முன்பு வரை மல்லி மார்க்கெட்டுகளில் கிலோ 700 முதல் 800 ரூபாய் வரை விற்றுக் கொண்டு இருந்த நிலையில், தற்போது மட மடவென உயர்ந்து
கிலோ 1200 முதல் 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பிச்சி பூவின் விலை இரண்டு தினங்களுக்கு முன்பு கிலோ 350 முதல் 450 ரூபாய் வரை விற்றுக் கொண்டு இருந்த நிலையில், மட மடவென உயர்ந்து
தற்போது கிலோ ரூபாய் 600 முதல் 750 வரை விற்கப்படுகிறது.
இது
போக பூஜைக்கு பயன்படுத்தப்படும் துளசி, ரோஜாக்கள், பன்னீர் பூ சரங்கள், மரிக்கொழுந்து,
செண்டு பூ சரங்கள், வாழைப்
பழங்கள் உள்ளிட்டவைகளும் மார்க்கெட்டுகளில் வெகுவாக விலை உயர்ந்து இருக்கிறது, பண்டிகையை ஒட்டி பூஜை பொருட்கள் எல்லாம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால், நுகர்வோர்களும், விற்பனையாளர்களும் பண்டிகைக்கு முன்னதாகவே பொருட்களை வாங்கி குவிக்க துவங்கி விட்டனர்.