Jasmine Price Surges - திருக்கார்த்திகை பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகம் பயன்படுத்தும் மல்லி மற்றும் பிச்சி பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து இருக்கிறது.
Jasmine Price Surges - பொதுவாக பண்டிகை தினம் என்றாலே பூக்களின் விலை பூ மார்க்கெட்டுகளில் கிடு கிடுவென உயர்ந்து விடும், அதிலும் மழைப் பருவம் மற்றும் பண்டிகை தினம் என இரண்டும் இணைந்தால் சொல்லவா வேண்டும், மல்லி, பிச்சி பூக்கள் இது போக மாலைக்கு பயன்படுத்தப்படும் நார்கள், கச்சைகள், உதிரிகள், ரோஜாக்கள், செண்டு பூக்கள் என அனைத்தின் விலையும் இன்று மார்க்கெட்டுகளில் உச்சத்தில் இருக்கிறது.
கோயம்பேடு, மதுரை, நெல்லை ஜங்சன் பூ மார்க்கெட்டுகளில் இன்று ஒரு கிலோ மல்லி ஆனது ரூ 2000 முதல் ரூ 2500 வரை விற்கப்படுவதாக தகவல், இது போக 100 பூக்கள் என பயனர்கள் உதிரியாக வாங்கும் போது, அதன் விலை 250 ரூபாய் என நிர்ணயிக்கப்படுகிறதாம், இதிலும் கட்டிய மல்லி 100 யின் விலையானது 300 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது.
பிச்சி பூக்களின் விலை பூ மார்க்கெட்டுகளில் 1 கிலோ ஆனது ரூபாய் 800 முதல் 1000 வரை விற்கப்படுவதாக தகவல், இது போக மாலை தயாரிக்கவும் சரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும், வாடா மல்லி கிலோ 100 ரூ முதல் 150 ரூ, ரோஜாக்கள் கிலோ 250 ரூ முதல் 300 ரூ, அரளி கிலோ 500 ரூ முதல் 600 ரூ, சம்பங்கி கிலோ 120 ரூ முதல் 150 ரூ என சந்தைகளில் விற்கப்படுகின்றன.
பூ விலையின் இந்த அதீத உயர்வுக்கு திருக்கார்த்திகை தினம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், பருவ மழையால் பூ விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பும் இன்னொரு காரணமாக கூறலாம், மழை அதீதமாக பெய்து வருவதால் பூ செடிகளிலேயே அழுகிப் போவதால் இழப்புகளை தவிர்க்க முடியவில்லை, இந்த இழப்புகள் தான் சந்தைகளில் இன்று பூக்களின் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.