Hyundai Cars Diwali Offers - பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஆன ஹீண்டாய், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது நிறுவன தயாரிப்புகளுக்கு பல்வேறு ஆபர்களை வழங்கி வருகிறது
Hyundai Cars Diwali Offers - தென்
கொரியாவின் சீயோல் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹீண்டாய் நிறுவனம், உலகளாவிய அளவில், முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் தயாரிப்பு
மற்றும் விற்பனைகளையும் செயல்படுத்தி வருகிறது. கிட்ட தட்ட 193 நாடுகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்களையும் ஹீண்டாய் நிறுவனம் கொண்டு இருக்கிறது.
வருடத்திற்கு மில்லியன் கணக்கில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் ஹீண்டாய் நிறுவனம், தென் கொரியாவில் மட்டுமே 1.9 மில்லியன் கார்களை உற்பத்தி செய்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஹீண்டாய் இந்தியாவில் தான் 7.65 இலட்சங்கள் கார்களை உற்பத்தி செய்கிறது, தென்கொரியாவிற்கு அடுத்து ஹீண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய மார்க்கெட் எது என்றால் அது இந்தியா தான்.
இந்த
நிலையில் தான் ஒவ்வொரு இந்திய பண்டிகைகளுக்கும், ஹீண்டாய் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில ஆபர் சேல்களை வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு,
ஒரு காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 80,000 வரை தள்ளுபடி அளிக்கப்படும் என ஒரு அதிரடியான
ஆபரை வெளியிட்டு இருக்கிறது.
ஹீண்டாய்
வென்யூ வகை கார்களை தீபாவளி ஆபரில் பர்சேஸ் செய்பவர்களுக்கு ரூபாய் 80,000 வரை தள்ளுபடி கொடுக்கப்படுமாம், அதே சமயத்தில் கிராண்ட் ஐ10 நியோஸில் வகை கார்களுக்கு ரூபாய் 58,000 வரை தள்ளுபடியும், எக்ஸ்டர் வகை கார்களுக்கு ரூபாய் 42,972 வரை தள்ளுபடியும், ஹூண்டாய் ஐ20 வகை கார்களுக்கு ருபாய் 55,000 வரை தள்ளுபடியும் வழங்கப்பட இருக்கிறதாம்.
இருப்பினும், ஆரா, க்ரெட்டா மற்றும் அல்கஸார் போன்ற வகை வாகனங்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது எனவும் ஹீண்டாய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த ஆபர் இந்தியா முழுக்க தீபாவளி சலுகை என்ற பெயரில் அக்டோபர் 31 வரையிலான காலங்களில் செயல்படுமாம். ஆபர்களில் கார் வாங்குபவர்களுக்கு பல அட்டகாசமான பரிசுகளும் காத்திருக்கிறதாம். அப்புறம் என்ன ஆபருக்கு முந்துங்கள்.