• India
```

இறக்கத்தில் இந்திய மார்க்கெட்டுகள்...கடும் வீழ்ச்சியை சந்தித்த IndusInd வங்கியின் பங்குகள்...!

Key Insights Of Stock Market

By Ramesh

Published on:  2025-03-12 16:40:39  |    13

Key Insights Of Stock Market - மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை என இரண்டுமே இன்று இறத்தில் முடிவடைந்து இருக்கிறது.

இன்றைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குசந்தைகளின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் முடிவு நிலைகள் குறித்து பார்க்கலாம்

மும்பை பங்குச்சந்தை - சென்செக்ஸ்

மும்பை பங்கு சந்தையின் குறியீடான சென்செக்ஸ், இன்று காலை 74,270.81 புள்ளிகளில் துவங்கி மாலையில் 74,029.76 புள்ளிகளில் முடிவடைந்து இருக்கிறது, நேற்றைய தினத்தின் முடிவை (74,102.32) காட்டிலும் இன்று 72.56 புள்ளிகள் சரிந்து இருக்கிறது, இன்றைய சென்செக்ஸ் அதிகபட்சமாக 74,392.15 புள்ளிகள் வரை சென்றது, குறைந்தபட்சமாக 73,598.16 புள்ளிகள் வரை சென்றது.

தேசிய பங்குச்சந்தை - நிஃப்டி

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி இன்று காலையில் 22,536.35 புள்ளிகளில் ஆரம்பித்து மாலையில் 22,470.50 புள்ளிகளில் முடிவடைந்து இருக்கிறது. நேற்றைய தினத்தின் முடிவை (22,497.90) காட்டிலும் இன்று 27.40 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இன்றைய நிஃப்டி அதிகபட்சமாக 22,577.40 புள்ளியைத் தொட்டது, குறைந்தபட்சமாக 22,329.55 என்ற புள்ளி வரை சென்றது.



பங்குச்சந்தையின் முக்கிய நிகழ்வுகள்

பங்குச்சந்தையின் முக்கிய நிகழ்வுகள் என்று எடுத்துக் கொண்டால் நிப்டியின் தொழில்நுட்ப குறியீடு (IT Sector Index) கிட்டத்தட்ட 3.1 சதவிகிதம் வரை வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது, முக்கியமாக இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.5 சதவிகிதம் வரை சரிவை சந்தித்து இருக்கின்றன, நிப்டியின் பினான்சியல் குறியீடு என்பது 0.5 சதவிகிதம் என ஒரு குறிப்பிடத்தக்க ஏற்றத்தை சந்தித்து இருக்கிறது.

IndusInd வங்கியின் பங்குகள் 27 சதவிகிதம் வரை சரிந்து இருக்கின்றன, வங்கியின் பொருளாதார நடவடிக்கைகள் மீதான சந்தேகங்களால் இந்த சரிவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது, உலகளாவிய அளவிலான பொருளாதார அசாதாரண சூழல்கள் தான் இந்திய பங்குச்சந்தையின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது, இன்னும் சில மாதங்களுக்கு இந்த மந்த நிலை தொடரும் என்கின்றனர் வல்லுநர்கள்.