• India
```

நாடு முழுவதும் GPay பயனர்களுக்கு தங்க நகைக் கடன்..வெளியான புதிய அறிவிப்பு!

Gpay Gold Loan |  Gpay Gold Loan Interest Rate

Gpay Gold Loan -Google For India நிகழ்வில், கூகுள் தனது 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில், GPay-ல் தங்க நகைக் கடன் வசதி, Adani குழுமத்துடன் கூட்டு திட்டங்கள் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் 3 நடைபெற்ற 'Google For India' நிகழ்வில், கூகுள் முக்கியமாக GPay-ல் தங்க நகைக் கடன் வசதி கிடைக்கப்பெறும் என அறிவித்துள்ளது. இது Google For India நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டமாகும். இந்த நிகழ்வில், தமிழ் உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் Gemini Ai இணைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கூகுளின் 4 முக்கிய அறிவிப்புகள் பற்றி பார்க்கலாம்,
1.GPay-ல் தங்க நகைக் கடன், நாடு முழுவதும் கூகுள் பே பயனர்களுக்கு முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தங்க நகைக் கடன் கிடைக்கும்.
2.அதானி குழுமத்துடன் கூட்டு, Google, Adani Groups மற்றும் ClearMax ஆகியவற்றுடன் இணைந்து குஜராத்தில் 61.4 மெகாவாட் சூரிய-காற்று கலப்பின ஆலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

3.UPI Circle வெளியீடு, Google Pay-ல் புதிய UPI Circle அம்சம் அறிமுகமாகி, இது பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும்.

4.Gemini Live 9 மொழிகளில், ஜெமினி லைவை தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி மற்றும் பிற மொழிகளில் அறிமுகம் செய்து, விரைவில் 7 இந்திய மொழிகளில் கிடைக்கும்.


மேலும், Google AI Skill House என்ற புதிய கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்து, மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான AI தொடர்பான படிப்புகளை YouTube மற்றும் Google Cloud Skill Boost தளங்களில் இலவசமாக வழங்க உள்ளது, என தகவல் வெளியாகியுள்ளது.