• India
```

தங்கம் விலை குறைஞ்சிருக்கு...கடந்த வாரத்தை விட...இந்த வாரம் பவுனுக்கு ரூ 280 குறைவு...!

Gold Rate Today

By Ramesh

Published on:  2024-12-07 18:46:40  |    170

Gold Rate Today (07-12-24) - ஆபரணத்தங்கத்தின் விலை என்பது கடந்த வாரத்தை ஒப்பிடும் போது பவுனுக்கு ரூ 280 வீதம் குறைந்து இருக்கிறது.

Gold Rate Today (07-12-24) - கடந்த வாரம் சனிக்கிழமை (30-11-24) அன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,150 என்று இருந்த நிலையில், இன்று (07-12-24) ஆபரணத்தங்கத்தின் விலை ரூ 7,115 ருபாய்க்கு விற்கப்படுகிறது, கடந்த வாரத்தை ஒப்பிடும் போது, ஆபரணத்தங்கத்தின் விலை ஆனது கிட்டதட்ட கிராமிற்கு ரூ 35 வீதம் சரிந்து இருக்கிறது.

பவுனுக்கு ரூ 280 வீதம் குறைந்து இந்த வார இறுதியில் ஆபரணத்தங்கம் ஆனது ஒரு பவுன் 56,920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஞாயிறு தினமான நாளையும் இதே விலை நீடிக்கும், கடந்த வாரத்தில் அதிகபட்சமாக ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 7,140 ரூபாய் (05-12-24) வரை விற்கப்பட்டது. குறைந்த பட்சமாக கிராம் 7.090 ரூபாய் (02-12-24) வரை விற்கப்பட்டது.



வெள்ளியை பொருத்த மட்டில் கடந்த வாரம் சனிக்கிழமை (30-11-24) அன்று ஆபரண மார்க்கெட்டுகளில் கிராம் 100 ரூபாய் வீதம் விற்கப்பட்டது, இன்றும் (07-12-24) அதே விலை தான் நீடிக்கிறது. இன்று 10 கிராம் வெள்ளி ஆனது ஆபரணச்சந்தைகளில் ரூ 1000 எனவும், 100 கிராம் வெள்ளி பார் ஆனது ஆபரணச்சந்தைகளில் ரூ 10,000 எனவும் விற்கப்படுவதாக தகவல்

வெள்ளியை பொருத்தமட்டில் ஆபரண மார்க்கெட்டுகளில் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக கிராம் 101 ரூபாய் (05-12-24) வரை சென்றது, கடந்த வாரத்தின் குறைந்த பட்ச விலை என்பது கிராம் 100 ரூபாய் தான், இன்றும் அதே விலை தான் சந்தைகளில் நீடிக்கிறது.