• India
```

ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை!

Gold Rate Today Tamil

By Ramesh

Published on:  2024-10-14 05:41:53  |    202

Gold Rate Today Tamil - இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை, நேற்று விற்கப்பட்ட அதே விலை தான் இன்றும் நீடிக்கிறது.

Gold Rate Today Tamil - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,120 என்று இருந்த நிலையில், இன்றும் அதே விலை தான் ஆபரண மார்க்கெட்டுகளில் நீடிக்கிறது. மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,825/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,773/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.

உச்சத்தில் நிலை கொண்டு இருக்கும் ஆபரணத்தங்கத்தின் விலையால் மக்கள் சற்றே அச்சம் அடைந்து இருக்கின்றனர், புரட்டாசி முடிவடையும் நிலையில் இனி விழா , வைபவங்கள் எல்லாம் வரிசை எடுக்கும் என்பதால் தங்கத்தின் விலை உயருமே தவிர குறைவதற்கு வாய்ப்புகள் கம்மி தான்.


வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 103 என இருந்த நிலையில், இன்றும் ஆபரண மார்க்கெட்டுகளில் அதே விலை நீடிக்கிறது. ஒரு கிலோ வெள்ளி ஆனது ரூபாய் 10,300 என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.

“ தங்கத்தை ஏற்கனவே சேமித்து வைத்து இருப்பவர்களுக்கு ஜாக்பாட், தங்கத்தை சேமிக்க நினைப்பவர்களுக்கு வருத்தம், தங்கத்தை வாங்க நினைப்பவர்களுக்கு அச்சம் என தங்கம் என்றாலே தற்போது மக்களுக்கு கலக்கமாக தான் இருக்கிறது ”