Gold Rate Today Tamil - இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை, நேற்று விற்கப்பட்ட அதே விலை இன்றும் நீடிக்கிறது.
Gold Rate Today Tamil - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,300 என்று இருந்த நிலையில், இன்றும் ஆபரண மார்க்கெட்டுகளில் அதே விலை நீடிக்கிறது, மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,973/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,964/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை அடைந்து இருக்கும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் அச்சத்தில் இருக்கின்றனர், அடுத்தடுத்து விலையேற்றத்தை நோக்கியே தங்கம் சென்று கொண்டு இருப்பதால் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு தினசரி அந்தத்த தினங்களில் இருக்கும் விலைகளில் தங்கத்தை வாடிக்கையாளர்கள் வாங்க ஆரம்பித்து விட்டனர்.
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 109 என இருந்த நிலையில், இன்று ஒரு ரூபாய் உயர்ந்து ஆபரண மார்க்கெட்டுகளில் கிராம் 110 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஆனது 11,000 ரூபாய் என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.
“ மென்மேலும் உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையின் இறக்குமதி வரியை குறைத்த போதும் கூட விலை உயர்வில் எந்த மாற்றமும் வரவில்லை ”