• India
```

மீண்டும் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரிப்பு...பவுனுக்கு ரூ 480 உயர்ந்தது...!

Gold And Silver Rate Today

By Ramesh

Published on:  2024-11-18 17:27:54  |    153

Gold And Silver Rate Today - இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு 480 ரூபாய் வீதம் உயர்ந்து மீண்டும் உச்சத்தை எட்டி இருக்கிறது.

Gold And Silver Rate Today - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 6,935 என்று இருந்த நிலையில், இன்று கிராமிற்கு 60 ரூபாய் வீதம் அதிகரித்து 6,995 ருபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,723/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,631/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் சற்றே கலக்கத்தில் இருக்கின்றனர், இன்று ஆபரண மார்க்கெட்டுகளில், ஒரு பவுன் ஆபரணத்தங்கத்தின் விலை என்பது 55,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 99 என இருந்த நிலையில், இன்றும் ஆபரண மார்க்கெட்டுகளில் வெள்ளியின் விலை அதே 99 ஆக நீடிக்கிறது, ஒரு கிலோ வெள்ளி ஆனது 99,000 ரூபாய் என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.

“ தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்து வந்த வாடிக்கையாளர்களுக்கு இன்று தங்கம் உயர்ந்து இருப்பது அவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தி இருக்கிறது  ”