Gas Cylinder Price Today - கமெர்சியல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை சற்றே குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் திகதி ஆனது ஆயில் நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை மறு ஆய்வு செய்யும், அந்த வகையில் 19 கிலோ கமெர்சியல் சிலிண்டருக்கான விலையை ஆயில் நிறுவனங்கள் சற்றே குறைத்து இருக்கின்றன, கடந்த மாதம் ஜனவரி 1 அன்று கமெர்சியல் சிலிண்டரின் விலை ஆனது 1,966 ரூபாய் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதாவது பிப்ரவரி 1 கமெர்சியல் சிலிண்டரின் விலை மறு ஆய்வு செய்யப்பட்டு 6 ரூபாய் மற்றும் 50 காசுகள் குறைக்கப்பட்டு இருக்கிறது, தற்போது 19 கிலோ கமெர்சியல் சிலிண்டரின் விலை 1,959.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, கமெர்சியல் சிலிண்டரின் விலை குறைப்பால் வணிக உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
அதே சமயத்தில் 14.2 கிலோ வீட்டு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை, கடந்த மாதம் 14.2 கிலோ கொண்ட வீட்டு சிலிண்டரின் விலை 818.50 ரூபாயாக இருந்த நிலையில், இந்த மாதமும் அதே விலை நீடிக்கிறது, சிலிண்டருக்கான மானியத்தை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை, ஆரம்பத்தில் 400 ரூபாய் வரை இருந்த மானியம் தற்போது ரூ 60 - 65 ஆகி இருக்கிறது.
என்ன தான் கமெர்சியல் சிலிண்டரின் விலை குறைந்து இருந்தாலும் கூட டெல்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிடும் போது சென்னையில் கமெர்சியல் சிலிண்டரின் விலை சற்றே அதிகம் தான், மும்பையில் எல்லாம் 19 கிலோ கமெர்சியல் சிலிண்டரின் விலை 1749.50 ரூபாய் தான், டெல்லியில் 1798.50 ரூபாய் தான், கொல்கத்தாவில் 1904.50 ரூபாய் ஆக இருக்கிறது.