Flowers Rate Today - முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் மல்லி மற்றும் பிச்சி பூக்களின் விலை சரமாரியாக உயர்ந்து இருக்கிறது.
பொதுவாக முகூர்த்த தினம் என்றாலே பூக்களின் விலை மார்க்கெட்டுகளில் கிடு கிடுவென உயர்ந்து விடும், அதிலும் முகூர்த்த நாள் மற்றும் பண்டிகை தினம் என இரண்டும் இணைந்தால் சொல்லவா வேண்டும், மல்லி, பிச்சி பூக்கள் இது போக மாலைக்கு பயன்படுத்தப்படும் நார்கள், கச்சைகள், உதிரிகள், ரோஜாக்கள், செண்டு பூக்கள் என அனைத்தின் விலையும் இன்று சந்தைகளில் உச்சத்தில் இருக்கிறது.
கோயம்பேடு, மதுரை, நெல்லை ஜங்சன் பூ மார்க்கெட்டுகளில் இன்று ஒரு கிலோ உதிரி மல்லி ஆனது ரூ 6500 முதல் ரூ 7000 வரை விற்கப்படுவதாக தகவல், இது போக 100 பூக்கள் என பயனர்கள் உதிரியாக வாங்கும் போது, அதன் விலை 800 ரூபாய் என நிர்ணயிக்கப்படுகிறதாம், இதிலும் கட்டிய மல்லி 100 யின் விலையானது 900 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது.
இது போக முல்லை பூவின் விலை கிலோ 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது, பிச்சிப் பூவின் விலை கிலோ ரூ 2,500 முதல் ரூ 3,000 வரை விற்கப்படுகிறது, கனகாம்பரம் பூவின் விலை கிலோ ரூ 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது, சம்பங்கி பூவின் விலை கிலோ 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது, செவ்வந்தி மற்றும் அரளி பூவின் விலை கிலோ 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பூ விலையின் இந்த தாறுமாறான விலை உயர்வால் மாலை விலையும் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது, பொதுவாக 150 ரூபாய்க்கு விற்கப்படும் மாலை ஆனது 3 மடங்கிற்கு மேல் உயர்ந்து 500 ரூபாய் வரை விற்கப்படுகிறதாம், கல்யாண மாலைகள் எல்லாம் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை விற்கப்படுகிறது, இந்த விலை உயர்வுக்கு அதிகப்படியான தேவையே காரணம் ஆக கூறப்படுகிறது.