• India

மள மளவென சரிந்த முட்டை விலை...காரணம் என்ன...?

Egg Rate Today

By Ramesh

Published on:  2025-01-06 18:05:53  |    45

Egg Price Today - தமிழகத்தை பொறுத்த வரை முட்டை என்றாலே நினைவிற்கு வருவது நாமக்கல் மாவட்டம் தான், பொதுவாக தமிழகத்தில் முட்டை விலை என்பது நாமக்கல் விலையை பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது, கிட்ட தட்ட தினசரி 6 கோடி முட்டைகள் நாமக்கலில் உற்பத்தி செய்யப்படுகிறது, தினசரி 4 கோடி முட்டைகளுக்கும் மேல் நாமக்கலில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் தமிழகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி நடைபெறுகிறது, முட்டை வர்த்தகம் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார வர்த்தகம் ஆக இருந்து வருகிறது, இந்தியாவின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 15.64% ஆக இருக்கிறது, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய முட்டை உற்பத்தி மையமாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.


சரி, இன்று நாமக்கலில் முட்டை விலை என்ன என்று கேட்டால் மொத்த விலைக்கு ஒரு முட்டையின் விலை 5.28 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம், மொத்த கடைகளில் ரூ 5.60 முதல் 5.80 வரை விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறதாம், ரீட்டைல் கடைகளில் ரூ 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு முட்டை ரூ 5.70 என விற்கப்படுகிறது.

கடந்த டிசம்பரில் முட்டை விலையானது மொத்த விலையே ரூ 6 வரை சென்றது, கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு கேக் தயாரிப்பதற்கு அதிக முட்டை தேவைப்படும் என்பதால் ஒரு அட்டை முட்டை என்பது மொத்த விலைக்கே ரூ 180 வரை சென்றது, ஆனால் தற்போது பண்டிகைகள் ஓய்ந்ததால் கிட்டதட்ட ஒரு அட்டை முட்டை 22 ரூபாய் வீதம் குறைந்து நாமக்கல் மொத்த விலைக்கு 158 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.