Egg Price Today Namakkal - நாமக்கல்லில் முட்டை விலை ஆனது கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து தற்போது 5 ரூபாய்க்கும் கீழ் வந்து இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்த வரை முட்டை என்றாலே நினைவிற்கு வருவது நாமக்கல் மாவட்டம் தான், பொதுவாக தமிழகத்தில் முட்டை விலை என்பதே நாமக்கல் சந்தையை பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது, கிட்ட தட்ட தினசரி 6 கோடி முட்டைகள் நாமக்கலில் உற்பத்தி செய்யப்படுகிறது, தினசரி 4 கோடி முட்டைகளுக்கும் மேல் நாமக்கலில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் தமிழகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி நடைபெறுகிறது, முட்டை வர்த்தகம் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார வர்த்தகம் ஆக இருந்து வருகிறது, இந்தியாவின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 15.64% ஆக இருக்கிறது, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய முட்டை உற்பத்தி மையமாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.
சரி, இன்று நாமக்கலில் முட்டை விலை என்ன என்று கேட்டால், மொத்த விலைக்கு ஒரு முட்டையின் விலை 4.83 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம், மொத்த கடைகளில் ரூ 5.18 முதல் 5.28 வரை விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறதாம், ரீட்டைல் கடைகளில் ரூ 5.50 முதல் 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு முட்டை ரூ 5.40 என விற்கப்படுகிறது.
சரி திடீரென முட்டை விலை 5 ரூபாய்க்கும் கீழ் சரிந்ததற்கான காரணம் என்ன என்று பார்த்த போது, கிறிஸ்துமஸ், புது வருட பிறப்புகளை ஒட்டு அதிகப்படியான முட்டை ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதுவே கிடப்பில் கிடக்கிறதாம், தேவை குறைந்ததாலும் உற்பத்தி அதிகமாக இருப்பதாலும் முட்டை விலை சரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.