• India
```

முட்டை விலை கிடு கிடு உயர்வு...இந்த திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்...?

Egg Price Becomes High

By Ramesh

Published on:  2024-12-03 16:05:23  |    168

Egg Price Becomes High - நாமக்கல்லில் முட்டை விலை ஆனது கிடு கிடுவென உயர்ந்து வருகிறது, அதற்கு பொதுவான காரணம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Egg Price Becomes High - பொதுவாக தமிழகத்தை பொறுத்த வரை முட்டை என்றாலே நாமக்கல் தான், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முட்டை விலை என்பது நாமக்கல் மார்க்கெட்டை பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது, கிட்ட தட்ட தினசரி 6 கோடி முட்டைகள் நாமக்கலில் உற்பத்தி செய்யப்படுகிறது, தினசரி 4 கோடி முட்டைகளுக்கும் மேல் நாமக்கலில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்றுமதி ஆகிறது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தமிழகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி நடைபெறுகிறது, முட்டை வர்த்தகம் தமிழகத்தில் மிகவும் பெரிய பொருளாதார வர்த்தகம் ஆக இருந்து வருகிறது, இந்தியாவின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 15.64% ஆக இருக்கிறது, இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய முட்டை உற்பத்தி மையமாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.



இன்று நாமக்கல்லில் முட்டை விலையானது ரூ 5.85 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, சந்தைகளிலும் கடைகளிலும் முட்டை ஆனது 6.80 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல், ஒரு அட்டை முட்டை என்பது நாமக்கல் விலையில் 175.5 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, மற்ற மாவட்டங்களில் ஒரு அட்டை முட்டை என்பது மொத்த விலையில் 192 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல்.

முட்டை விலையின் இந்த கிடு கிடு உயர்வுக்கு காரணம் அதிகப்படியான தேவையும், பருவ சூழலும் என கூறப்படுகிறது, கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்டவைகளுக்காக கேக் அதிகப்படியாக தயாரிக்கப்படும் என்பதால் முட்டையின் தேவை அதிகரித்து இருப்பதால் விலையும் அதிகரித்து இருக்கிறது, தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையும் முட்டை விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.