• India
```

உங்க வீட்ல முருங்கை மரம் இருக்கா...அப்படின்னா இது தான் சரியான நேரம்...இப்ப விற்றீங்கன்னா இலாபத்தை அள்ளலாம்...!

Drumstick Rate Hit RS 500

By Ramesh

Published on:  2024-12-11 16:06:08  |    1001

Drumstick Rate Hit RS 500 - முருங்கைக்காயின் விலை பன் மடங்காக அதிகரித்து வருவதால் முருங்கைக்காய் வியாபாரிகளில் இலட்சங்களில் இலாபம் பார்த்து வருகின்றனர்.

Drumstick Rate Hit RS 500 - உலகிலேயே அதிக அளவில் முருங்கை பயிரிடுவது இந்தியாவில் தான், வருடத்திற்கு கிட்டதட்ட 1.5 மில்லியன் டன் முருங்கைக்காய்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது, இத்தியாவிற்குள் என்று எடுத்துக் கொண்டால் தமிழகம் தான் மிகப்பெரிய முருங்க உற்பத்தியாளராக விளங்கி வருகிறது, அதற்கு அடுத்ததாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இருக்கின்றன.

முருங்கை பயிரிடலுக்கு பெரிதாக முதலீடோ, கவனிப்போ தேவையில்லை என்பதால் பலரும் தோட்டங்கள் வைத்து பயிரிட்டு வருகின்றனர், கீரை வகைகளும், காய் வகைகளும் நல்ல இலாபம் தரக்கூடியது மற்றும் நீண்ட கால பயிர் என்பதாலும் பலரும் முருங்கை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர், பலர் பயிரிட்டு வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.



சமீப காலமாக தமிழகத்திற்குள்ளாகவே 1 கிலோ முருங்கையின் விலை ரூ 500 வரை சென்றது, தற்போது கிலோ ரூ 350 ஆக இருக்கிறது, கர்நாடாகாவில் விலை குறையாமல் இன்னும் கிலோ ரூ 500 க்கே விற்கப்படுகிறது, அந்த வகையில் தமிழக முருங்கை விவசாயிகள் பலரும் கர்நாடாகாவிற்கு தங்கள் முருங்கைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

டிசம்பர் முடிந்து ஜனவரி எட்டும் வரையிலும் முருங்கையின் விலை இப்படி தான் இருக்கும் என கூறப்படுகிறது, விலை அதிகரித்து இருப்பதால் முருங்கை விவசாயிகள் பலரும் முருங்கையை தீவிரமாக சந்தைப்படுத்தி வருகின்றனர். தினசரி 10 கிலோ சந்தைக்கு அனுப்பினால் கூட ரூ 2500 முதல் 4000 வரை இலாபம் கிடைப்பதாக முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.