Chicken Price Hike - பொதுவாகவே சிக்கன் என்பது மக்களின் ஆகச்சிறந்த விருப்பமான அசைவ உணவு ஆக அறியப்படுகிறது, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் கிரேவி, சிக்கன் கொத்து, க்ரில் சிக்கன், சில்லி சிக்கன் என சிக்கனில் செய்யப்படும் அனைத்து உணவு வகைகளுமே பொது மக்களின் விருப்ப உணவுகளாக தான் இருக்கிறது, இன்னொன்று மட்டனைக் காட்டிலும் மலிவான அசைவ உணவு.
ஆனால் அந்த சிக்கனே கிலோ 1200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா, ஆம் ஒரு கிலோ சிக்கன் ரூ 1200 தான், லாகூர், கராச்சி, பஞ்சாப் என பாகிஸ்தான் சிக்கன் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சிக்கன் ரூ 900 முதல் ரூ 1200 வரை விற்கப்படுகிறதாம், அதிகாரப்பூர்வமாக அரசு விலையை குறைத்து நிர்ணயித்தாலும் கூட விற்பனையாளர்கள் அதே விலையில் தான் நிற்கிறார்களாம்.
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் அனைத்து அத்தியாவசியங்களுமே விலை உயர்வை கண்டு வருகிறது, அந்த வகையில் சிக்கனும் தற்போது அந்த விலை உயர்வு பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது, சிக்கனின் இந்த விலை உயர்வுக்கு பொருளாதார மந்த நிலை மட்டும் காரணம் அல்ல, அதீத தேவையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காரணமாக தற்போது சிக்கனின் தேவை அங்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது, இதன் காரணமாகவே அங்கு ஒரு கிலோ வெட்டிய சிக்கன் ரூ 800 முதல் 1200 வரை ரீட்டைல் சந்தைகளில் விற்கப்படுவதாக கூறுகின்றனர், சிக்கன் மட்டுமா உயர்ந்து இருக்கிறது என்றால் முட்டையும் 12 முட்டை ரூ 380 க்கு விற்கப்படுகிறதாம். அதாவது ஒரு முட்டையின் விலை 30 ரூபாயை தாண்டுகிறது.
" இது குறித்து அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அதிகாரப்பூர்வமாக விலை நிர்ணயிக்கப்பட்டாலும், விற்பனையாளர்கள் அவர்கள் போக்கில் தான் விற்கிறார்கள் என கூறப்படுகிறது "