Beans Price Hit 200 Rs - சமையலுக்கு பயன்படுத்தப்படும் பீன்ஸ் விலையானது, காய்கறி சந்தையில் இரு நூறைத் தொட்டு இருக்கிறது.
Beans Price Hit 200 Rupees - பொதுவாக சந்தைகளிலும், மார்க்கெட்களிலும் காய்கறிகளில் தங்கமாக கருதப்படுவது பீன்ஸ், ஆனால் அந்த பீன்ஸ் தற்போது கொஞ்சம் முன்னேறி தங்கத்தில் இருந்து பிளாட்டினம் ஆகி இருக்கிறது. அதாவது 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை சந்தைகளில் விற்று வந்த பீன்ஸ் ஆனது தற்போது காய்கறி சந்தைகளில் அதிரடி காட்டி இரு நூறைத் தொட்டு இருக்கிறது.
சைவ பிரியாணி, ஃபிரைடு ரைஸ்கள், பிரிஞ்சு சாதங்கள் உள்ளிட்டவைகளில் முக்கிய பங்காற்றும் பீன்ஸ் விலை உயர்ந்து இருப்பதால், ஹோட்டல்களில் உணவுகளும் விலை ஏற்றத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பீன்ஸ்கள் பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏற்றுமதி ஆகி தமிழகம் ஏனைய பகுதிகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.
நேரடியாகவும் மொத்தமாகவும் கொள்முதல் செய்பவர்களுக்கே, பீன்ஸ் விலையானது ரூபாய் 180 முதல் 190 வரை விலை நிர்ணயிக்கப்படுவதாக தகவல், அந்த மொத்த வியாபாரிகள் இடம் இருந்து, சில்லறை வியாபாரிகளுக்கு பீன்ஸ் 200 ரூபாய்க்கு கை மாற்றப்படுகிறது, சில்லறை வியாபாரிகள் சந்தையில் பீன்ஸ்சை 220 முதல் 240 ரூபாய் வரை நுகர்வோர்களிடம் விற்பதாக தகவல்.
ஏன் இவ்வளவு விலை ஏற்றம்?
தொடர்ந்து பெய்துவரும் மழை தான் இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது, மழையால் விளைச்சல் நிலப்பகுதியிலேயே பீன்ஸ்கள் அழுகி போவதாலும், ஏற்றுமதி லாரிகள் அங்கிருந்து இங்கு வருவதற்குள் பீன்ஸ், மழையினால் வாடை அடிப்பதாலும் குறைந்தபட்ச பீன்ஸ்களே மார்க்கெட்டிற்கு வருகிறது, தேவை, குறைந்த பட்ச இறக்குமதி, மழை உள்ளிட்ட காரணங்களாலே பீன்ஸ் விலை ஏற்றத்தை சந்தித்து இருப்பதாக தகவல்.